siruppiddy

திங்கள், 30 நவம்பர், 2015

நாடக நடிகையின் பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

இலங்கை தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகையான சனோஜா பிபிலையின் கையடக்கத் தொலைபேசி, பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்3.5 மில்லியன் மதிப்புள்ள நகைகளும், மற்றும் 32,000 ரூபா பணமும் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவருடைய காரில் இருந்தே, இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கால்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் மாலை, காலம்சென்ற தமித சலுவதனவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வருகை தந்த சந்தர்ப்பத்தில்,மரண வீட்டிற்கு பக்கத்தில் தனது காரை நிறுத்தி வைத்த வேளையில், இக்கொள்ளை சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
திருடர்கள் காரின் கண்ணாடியினை உடைத்தே இக்கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,பிலியந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 27 நவம்பர், 2015

தீபம் ஏற்றிய மூதாட்டிக்கு யமனாக அமைந்த கிணறு

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிணற்றடியில் விளக்கிட சென்ற மூதாட்டி ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
மன்னார் பண்ணை நாச்சுமார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜெகநாதன் ராமை ரத்தினம் (67 வயது) மூதாட்டியே இவ்வாறு 
மரணமடைந்துள்ளார்.
இவர் கிணற்றில் விழுந்ததும் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையை தொடர்ந்து சடலம் இன்று நண்பகல் உறவினரிடத்தில் கையளிக்கப்பட்டது.
கணவனும் மனைவியும் இவ்வீட்டியில் தனியாக வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பித்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை (காணொளி இணைப்பு)

மனிதர்கள் எதையாவது சாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அதனால்தான் எப்போதும் புதுப்புது கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.
அதே நேரத்தில் மிகவும் விநோதமான சாதனைகளையும் செய்வதற்கு ஈடுபாடு கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
டச்சு நாட்டின் சைக்கிள் கழகம் ஒன்று உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிளை உருவாக்கி சாதனை 
படைத்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் பிராங்க் பெல்ட் கூறுகையில், உலகம் முழுவதும் சைக்கிள் வர்த்தகம் மிகவும் அதிக அளவில் நடக்கக் கூடியது. ஆனால் நாங்கள் தயாரித்துள்ளது அதில் இருந்து மாறுபட்ட ஒன்றை என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 117 அடி நீளம் உடைய இந்த சைக்கிளிற்கு இதற்கும் இரண்டு சக்கரங்கள்தான் உள்ளன. இதை இரண்டு பேர் எளிதாக ஓட்டிச் செல்லலாம். உலகிலேயே மிகவும் நீளமான சைக்கிள்
 இதுதான்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 நவம்பர், 2015

இலங்கைப்பெண்ணுக்கு கிடைத்த சொற்பனம்

டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக 
நடித்தார்.
இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நதியா, ‘பி.ஏ.’ (அக்கவுன்டன்சி) பட்டதாரி. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆரி-நதியா இருவரும் திருமணம் செய்து கொள்ள
 விரும்பினார்கள்.
இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு 
நடக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. அதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நிருபரிடம் நடிகர் ஆரி
 கூறியதாவது:-
‘‘நானும், நதியாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் எங்கள் நட்பு உருவானது. கடந்த மூன்று வருடங்களாக நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். சமீபத்தில்தான் அது காதலாக மாறியது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். எங்கள் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்
 கொண்டார்கள்.
எனவே இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்’’. இவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 20 நவம்பர், 2015

சாலை விபத்தில் முதியவர் மரணம் சாரதிக்கு 2 வருட கடூழியச் சிறை

கவனமின்றி வேகமாக அரச பேருந்தைச் செலுத்தி, 97 வயதானவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் 
தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருக்கு,
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில், சின்னத்தம்பி மார்க்கண்டு என்ற வயோதிபருக்கு விபத்து மரணம் ஏற்படுத்தியமைக்காக அரச பேருந்து சாரதியாகிய கணபதிப்பிள்ளை ரகுநாதனுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்தை
 கவனமின்றி
அதிவேகமாகச் செலுத்தியமை, போதிய அவதானமும் முள்பாதுகாப்பின்றியும் விழிப்பின்றியும் செலுத்தியமை காரணமாக ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்தியதன் அடிப்படையில்,
கணபதிப்பிள்ளை ரகுநாதனுக்கு எதிராகக் குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது, தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை எதிரி ஏற்றுக்கொண்டார்.
எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, அவருடைய அரச சேவைக்குப் பாதிப்பின்றி தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் விண்ணப்பித்தார்.
வழக்கினையும், எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டதையும், எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தையும் நீதிபதி கவனத்தில் எடுத்து ஆய்வு செய்ததன் பின்னர் போட்டிக்கு வாகனம் ஓடி,
விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, தவறுதலாக நடந்துவிட்டது என கூறி நீதிமன்றத்தில் நிவாரணம் பெற முடியாது என தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 
பேருந்து சாரதிகள் போட்டிக்கு வாகனங்கள் ஓடுவதனாலேயே, அதிகமான விபத்து மரணம் ஏற்படுகின்றது. காயங்கள் மூலம் பலர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள்.
இந்த வழக்கில் அரச போக்குவரத்து வண்டியும் தனியார் வண்டியும் போட்டிக்கு ஓடியதன் காரணமாக, 97 வயது வயோதிபர் விபத்து மரணத்தில் இறந்துள்ளார். வயோதிபர்கள், சிறுவர்கள், மாணவ மாணவிகளை பாதுகாக்க, இந்த சாரதிகள் தவறுகின்றார்கள்.
இந்த வழக்கின் எதிரி ஓர் அரச போக்குவரத்து சாரதி. அரச போக்குவரத்து வண்டியை ஒட்டியவர். அவருக்குக் கடமைப் பொறுப்பு மிக அதிகமாகும். அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அரச தனது வண்டியில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கௌரவத்தையும், தனது அரச கடமை பொறுப்பையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் இத்தகைய பொறுப்புமிக்க கடமைகளில் இருந்து இவர் தவறியுள்ளார்.
சட்டப்புத்தகங்களில் என்னதான் இருந்தாலும், போக்குவரத்து வண்டிகளின் வேகம் அதிகரிப்பு மக்கள் நடமாட்டங்களைப் பொறுத்து வேறுபடும். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் மக்கள் செறிவு அதிகரித்துள்ளது.
எனவே 40 கிலோ மீற்றருக்குக் குறைவான வேகத்தில் ஓடினயாவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது, சாரதிகள் கடமை பொறுப்பாகும்.
போட்டிக்கு ஓடி விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, தவறுதலாக நடந்த விபத்து எனக் கூறி மன்றில் நிவாரணம் பெற முடியாது.
எனவே, இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
அத்துடன், இறந்தவருடைய 3 பிள்ளைகளுக்கும் சமமாகப் பங்கிடும் வகையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நட்டயீடு வழங்க வேண்டும் எனவும் .இந்த நீதிமன்றம் கட்டளையிடுகின்றது என்றார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 18 நவம்பர், 2015

மழை ஓய்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன

யாழ்.குடாநாட்டில் மூன்று நாட்காளாகப் பெய்த அடை மழை ஓய்ந்து மூன்று நாட்களாகியும் ஏழாலை தெற்கின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் குளம் (ஏழு கோவில் குளம்) பெருக்கெடுத்தமையினால் ஏழாலை தெற்கில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக ஏழாலை தெற்கு விழிசிட்டிப் பகுதியைச் சேர்ந்த 16 குடும்பங்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தால் இடம்பெயர்ந்து ஏழாலை முத்தமிழ் மன்ற நூலக மண்டபத்தில் 
தங்கியுள்ளன.
அத்துடன் ஏழாலை தோப்புப் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் 24 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளன.
தோப்புப் பகுதிக்குள் உள்நுழையும் வீதியில் மனிதர்கள் நடமாட முடியாதவளவு மூன்று அடி உயரத்துக்கு மேலாக மழை வெள்ளம் தேங்கிக் காணப்படுகிறது. தற்போதும் குறித்த பகுதியின் சில வீடுகளுக்குள் ஒரு அடிக்கு மேலாக வெள்ளம் பெருகிக் காணப்படுகிறது.
குறித்த பகுதிகளில் வீடுகளுக்குள் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெள்ளம் காரணமாக வெளியேறுவதற்கு அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிணறுகளுக்குள் 
வெள்ளம் புகுந்ததால் 
குடி நீரின்றி அந்தரிப்பதுடன் மலசல கூடங்களின் குழிகள் வெள்ளம் காரணமாக நிரம்பி வழிவதால் மலசலகூடங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதுடன் அவை வெள்ளத்துடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த குடிமனைகளுள்ள தோப்புப் பகுதியில் திருடர் குழுவொன்றின் நடமாட்டம் காணப்படுவது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன் காரணமாக இடம்பெயர்ந்த பொதுமக்கள் அச்சத்திலுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் இதுவரை அரச அதிகாரிகளோ அல்லது அரசியல் வாதிகளோ நேரடியாக வந்து பார்வையிடவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இன்று புதன்கிழமை (18-11-2015) அதிகாலை வேளையில் குடாநாட்டில் கடும் மழையுடனான காலநிலை காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது  
செவ்வாய், 17 நவம்பர், 2015

நபர் மீது மண்­வெ­ட்­டியால் தாக்குதல் : மூன்று பேர் கைது

மண்வெட்டியால் தாக்கி நபர் ஒருவரைக் காயப்படுத்தியதா சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பை இரட்டிக்குளம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
மண்வெட்டித் தாக்குதலுக்கு உள்ளான மாதம்பை இரட்டிக் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
திங்கள், 16 நவம்பர், 2015

கண்டியில் போதைப் பொருள் விற்பனை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை!

போதைப் பொருள் விற்பனை செய்த பெண் ஒருவருக்கு கண்டி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நாள் தோறும் ஹெரோயின் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிய கணவர் மற்றும் தந்தைக்கும் ஹெரோயின் போதைப் பொருள் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தப் பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப் பொருள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் பெண் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கண்டி சுதுஹ_ம்பொல என்னும் இடத்தில் வதியும் சந்திரலேகா குமாரி பெரேரா என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.
கண்டி உயர் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர இன்று இந்த தண்டனையை விதித்துள்ளார்.
2014ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி இந்தப் பெண் கைது 
செய்யப்பட்டிருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

குரங்காக யாழில் மாறிய இரு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர்.

இந்த இருவரும், அப்பகுதியிலுள்ள காணிகளின் வேலிகளை பிடுங்கி அட்டகாசம் செய்த வண்ணம் வீதியில் நின்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 9 நவம்பர், 2015

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்கினிய  வாசகர்கள், அன்பு உறவுகளுக்கும் அனைவருக்கும் என் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
எம் தாய் நாட்டிலும் உலகெங்கிலும் பரந்து வாழும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது  வலையமைப்பின் சார்பில் 
 இனிய தீப ஓளித் திருநாள்
 நல்வாழ்த்துக்கள்.
இருட்டை கிழித்து பிறக்கட்டும் புது வழி… மத்தாப்பு புன்னகையில் கரையட்டும் கண்ணீர் துளி… விடியும் பொழுது ஒளிர- ஏற்று தீப ஒளி… முடியும் என்ற திண்ணம் கொண்டு துவங்கட்டும் 
தீபாவளி
ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன், நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீபத் திருநாளில் எனது இனிய நல்வாழ்த்துக்களுடன்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்  இணையங்களும்  வாழ்த்துகின்றது 
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>திடிர் நாடக மன்றத்தினரால் மதிப்பளிக்கப் கணேஷ் தம்பையா

லண்டனில் அரியாலை மன்றத்தினரால் மதிப்பளிக்கப் படுகிறார் திரு. கணேஷ் தம்பையா தன் சிறுவயதில் இருந்து வில்லிசை வித்தகனாய் எங்கள் தாயகத்தில் பட்டி, தொட்டி எங்கும் வலம் வந்த ஓர் கலைஞர்.
 இலங்கை வான்ஒலி, 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அன்றே வரவேற்பு பெற்ற ஓர் அற்புதமான கலைஞர். அன்று முதல் இன்றுவரை மிளிரும் கலைஞர். “நையாண்டி மேளம்” எனு‌ம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.(ஒரு மரத்தில் பூவும், காயும், கனியும்,கலகலப்பாய் வெளியே தெரியும் வேர்
 தெரிவதில்லை
அப்படி நடித்தவர்கள் உலக வலம் வர தன்னை மறந்து மகிழும் மனிதர். பல படைப்புகள், படைப்பாளிகள் உருவாகக் காரணமானவர்திரு. கணேஷ் தம்பையா இன்று லண்டனில் அரியாலை திடிர் நாடக மன்றத்தினரால் மதிப்பளிக்கப் பட்டதற்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்   வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 7 நவம்பர், 2015

தாழமுக்கம் இலங்கைக்கு அருகில் சூறாவளி எச்சரிக்கை!!!

நாட்டின் பல இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் 
தெரிவிக்கிறது.
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றமுக்க நில ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை 
பெய்யக் கூடும்.
இதன்போது கிழக்கு கரையோர பகுதியில் பலமான காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் கிழக்கு கடலிலிருந்து (திருகோணமலையிலிருந்து) 500 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காற்றமுக்க நிலை வலுவடையும் நிலை ஏற்பட்டால் கிழக்கு கடலில் சூறாவளி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்.05.11.15

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் 
( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன்(மோகன் )தனது 
 பிறந்த நாளை. 05.11.201515.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள்  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு 
சீரும் சிறப்புடன் சகல வளம் பொங்க! பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 நவம்பர், 2015

புகையிரதங்களில் இன்று முதல் பிச்சை எடுக்க தடை?

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பவர்களை நாளை (01) முதல் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதன் பிரகாரம் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார், ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி நாளை முதல் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் 
மேலும் கூறினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஆப்பிள் ஃபோனை பேஸ்புக் ஊழியர்கள் பயன்படுத்த தடை

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஆப்பிள் போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏதோ பேஸ்புக்கிற்கும் ஆப்பிளுக்கும் சண்டை என்று நினைத்துவிட வேண்டாம். பேஸ்புக்கை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ராய்ட் போன்களைத்தான். ஆனால், பேஸ்புக்கில் பணிபுரிபவர்கள் பயன்படுத்துவது ஆப்பிள் போன்களை தான். எனவே, அவர்களுக்கு ஆண்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்வது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தலைமை செயல் அதிகாரி கிறிஸ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கிறிஸ் காக்ஸ் தெரிவிக்கையில், “இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலனவர்கள் ஆப்பிள் போன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே எங்கள் அணியில் இருக்கும் அனைவரையும் ஆப்பிள் போன்களில் இருந்து ஆண்ராய்ட் போன்களுக்கு மாறும்படி கூறியுள்ளேன். இதன் மூலம் பேஸ்புக் பயனாளர்கள் சந்திக்கும் அதே பிரச்சனைகளை அவர்களும் எதிர்கொள்ள நேரிடும்.” என்று
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை