siruppiddy

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.   அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள்
 முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் 
செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை 
உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.   இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விரைவில் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
  புதிய அரசாங்கத்தில், அரச துறையில் 10 லட்சம் 
புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 ஆகஸ்ட், 2015

கடும் வரட்சி! லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு???

இலங்கையில் வரட்சி காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள சுமார் இரண்டு இலட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் மக்கள் வரட்சி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கான குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தேவையான நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பல பகுதிகலில் வீசிய பலத்த காற்றினால் அதிகமான வீடுகள் சேதம்???

வவுனியாவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 05 வீடுகள் சேதமாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவ லங்காபுர பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குருநாகல் பொலிபித்திகம பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 20 இற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கொழும்பிலிருந்து யாழ். வல்வெட்டித்துறைக்கு சென்ற வேன் ஒன்று மதில் ஒன்றில் மோதி இன்று (16) அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 ஆகஸ்ட், 2015

பிரான்ஸ் பிரஜையுடன் சேட்டை: வசமாக மாட்டிய இராணுவ சிப்பாய்

கிழக்கில் உல்லாச புரியான பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையாக ஆபாசமாக நடந்து கொண்ட சிவில் உடையில் காணப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை குறித்த பெண் செய்த 
முறைப்பாட்டினையடுத்து கல்குடா பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று  கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்,

குறித்த பெண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் இங்குள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த 3 நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இவர் வழக்கம் போல் செவ்வாய்கிழமையும், முதல் நாள் திங்கள் கிழமையும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது குறித்த சந்தேக நபரும் கடலில் குளித்துள்ளார்.
இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணியுடன் தமது மர்ம உறுப்பினை காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதுடன் தனக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன் தன்னை பின் தொடர்ந்து மேலும் அசௌகரியங்களை 2 நாட்களாக தொடர்ந்து ஏற்படுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமக்கு ஏற்பட்ட இவ் விபரீதம் எந்தவொரு பெண்ணுக்கும் இடம்பெறக் கூடாது எனவும் குறித்த சந்தேக நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டு புதன் கிழமை வாகரை சுற்றுலா நீதி மன்ற நடவடிக்கைகள் நடைபெறவிருப்பதனால் அங்கு குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து காணப்படுவதாகவும் இவ்வாறான நிலமை தொடர்ந்து நீடிக்குமானால் சுற்றுலா பயணிகளின் வருகை பாசிக்குடாவில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமது வருவாய்க்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 8 ஆகஸ்ட், 2015

கால்களில் பிளேடுகளை பொருத்திக் கொண்டு அவர் ஓடுகின்றார்???

மாற்றுத்திறனாளிகளுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் பிரபல தென்ஆப்ரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். ஊனமான தனது கால்களில் பிளேடுகளை பொருத்திக் கொண்டு அவர் ஓடுவதை பார்த்தாலே தன்னம்பிக்கை அதிகரித்து விடும்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதாரண வீரர்களுடன் இணைந்து 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க பிஸ்டோரியசும் தகுதி பெற்றார். உலகிலேயே இத்தகைய பெருமையை பெற்ற ஒரே மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்தான். 
தற்போது இந்தியாவில் இருந்தும் 
ஆஸ்கர் பிஸ்டோரியஸ் போலவே மற்றொரு வீரர் புறப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த ஆனந்த், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி, ஆனந்த் தனது கால்களை இழந்தார். அதற்கு பின் ராணுவத்தில் இருந்து விலகிய ஆனந்த், ஆஸ்கர் பிஸ்டோரியஸ் போல விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டுமென ஆர்வம் கொண்டுள்ளார்.
இதற்காக தற்போது பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்காக உலகத் தடகளத்தில் பங்கேற்று சாதிக்க வேண்டுமென்பதே தற்போது ஆனந்தின் ஒரே லட்சியம். கால்களை இழந்தாலும் மனோதிடத்தை இழக்காத ஆனந்தின் லட்சியம் வெற்றி பெற வாழ்த்துவோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பிறந்த நாள்வாழ்த்து,திரு காண்டீபன் அஸ்வின .06.08.15

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சில்  வசிக்கும்.திரு  காண்டீபன்  
[ காண்டீ] அவர்களின் செல்வப்புதல்வி  அஸ்வினவின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2015. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த  உறவை பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர் .





இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15. .


யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்
 சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று பல்கலைகளும்  பெற்று சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று பிறந்தநாள் 
ஒரு மலர் மலர்ந்தநாள் 
என் பாசமலரின் பிறந்தநாள். 
இதோ..! உனக்காக.. 
ஒரு வாழ்த்து..! 
என் அன்பு 
வானத்தின் நட்சத்திரமே..! 
வாகை சூடி சரித்திரம் படைத்திடு.! 
வானம் தொடும் புகழ் அடைந்திடு.! 
வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும் 
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும். 
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! 
-நிம்மதியான 
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று 
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.! 
என் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!   


திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இன்று 24 மணித்தியாலத்தினுள் 9 வன்முறைச் சம்பவங்கள் ???

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பொதுத் தேர்தல் தொடர்பிலான 09 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் செயலக தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 892 ஆகும்.
அவற்றில் அதிகம் சட்ட விரோதமான பாதாகைகள், சுவரொட்கள் தொடர்பிலானவைகளாகும், அவை தொடர்பில 190 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 123 காவல்துறை சுற்றிவளைப்புகளில் 304 பேரும், காவல்துறை தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற 145 முறைப்பாடுகள் தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை