siruppiddy

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஒரே தண்டவாளத்தில் நேர் எதிரே இரு ரயில்கள் பயணித்தன!!!

காலி கிங்தோட்டை பகுதியில் இரு புகையிரதங்கள்  ஒரே பாதையில் நேர் எதிரே பயணித்த நிலையில் ஏற்படவிருந்த  அனர்த்தம் மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த  சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன் இது தொடர்பில் கண்டி - மாத்தறை புகையிரத்த்தின் சாரதி, துணைச் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி - மாத்தறை புகையிரதம், சமிக்ஞையை மீறி செயற்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின யணித்துக்கொண்டிருந்த அதே பாதையில் கண்டியிலிருந்து மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த புகையிரத்த்திற்கு சமிஞ்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிரத சாரதிகளின் திறமையினால் இடம்பெறவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 22 ஜனவரி, 2016

நினைவஞ்சலி. நான்காவது ஆண்டு அமரர் திரு வீரகத்தி

அன்னை  மடியில்:  — ஆண்டவன் அடியில் : 22.01.2012 யாழ். புத்தூரைப்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு வீரகத்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் நான்குஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
என் அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் புத்தூர் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>புதன், 13 ஜனவரி, 2016

கிணறுகளைக் காணாமல் யாழ். வலி வடக்கில் தேடும் மக்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களின் காணிகளில் காணப்பட்ட கிணறுகள் பலவற்றைக் காணவில்லை.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த வலிகாமம் வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 701.5 ஏக்கர் காணிகள் கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தப் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்திருந்திருந்த கிணறுகளுக்குள் குப்பைகளை கொட்டி இராணுவத்தினர் மூடியுள்ளனர். இவ்வாறு குப்பைகள் போடப்பட்டமையால் பல கிணறுகள் மூடப்பட்டுக் காணப்படுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 8 ஜனவரி, 2016

காணாமல் போன விமானம் பயணிகள் அனைவரும் உயிருடன் சிறையில்

மலேசிய விமானம் 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போய் 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்களை உயிருடன் சிறை பிடித்து வைத்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.
மலேசிய நாட்டை சேர்ந்த MH370 என்ற விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீய்ஜிங் நகருக்கு புறப்பட்டுள்ளது.
ஆனால், விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ரேடார் கருவியில் இருந்து விலகிய அந்த விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கி இருக்கலாம் என பல யூகங்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், கடந்த யூலை மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் இறக்கையானது காணாமல் போன மலேசிய விமானத்தின் இறக்கை தான் என பிரான்ஸ் விசாரணை அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத சீனாவை சேர்ந்த 154 பயணிகளின் உறவினர்கள் தற்போது பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘மலேசிய விமானத்தில் பயணத்த தங்களுடைய உறவினர்கள் சாகவில்லை. அவர்களை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் சிறை வைத்துள்ளனர்.
தங்களுடைய உறவினர்களை எதற்காக சிறை பிடித்துள்ளனர் என தெரியாது. ஆனால், அவர்களை உடனடியாக விடுதலை செய்தால் கடத்தல்காரர்களை மன்னிக்க தயார்.
அண்மையில் பிரான்ஸ் அதிகாரிகள்கண்டுபிடித்த இறக்கை மலேசிய விமானத்தின் இறக்கை தான் என்பதை எங்களால் ஏற்க முடியாது. இதில் ஒரு மிகப்பெரிய மர்மம் இருப்பதாக’ உறவினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மலேசிய விமானம் காணாமல் போய் கிட்டதட்ட 2 வருடங்கள் ஆன பிறகு, பயணிகளின் உறவினர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>வியாழன், 7 ஜனவரி, 2016

கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை பொலிஸார்மடக்கி பிடித்தனர்?

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து 
கைவிலங்கிட்டிருந்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற போது கலஹா பொலிஸார் கண்டுபிடித்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்
இதன்போது வாகனத்தில் அதிக போதைப் பாவனையுடன் நபர் ஒருவர் காணப்பட்டதாகவும் இந் நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை