siruppiddy

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போதனா வைத்தியசாலை 'பாஸ்' நடைமுறை நீக்கம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும்
 நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக காலை 6மணிமுதல் காலை 6.30 மணிவரை,
மதியம் 12மணி தொடக்கம் பி.ப1மணி வரை, மாலை 5மணி தொடக்கம் 6 மணிவரை காலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்க மாத்திரம் அனுமதிக்கப்படும்.
விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்காக இதுவரை காலமும் இருந்து வந்த பாஸ் அனுமதி நடைமுறை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதோடு ஒரே நேரத்தில் ஒரு நோயாளியின் அருகே இரு பார்வையாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பொதுமக்கள் தமது தேவைக்கும் நோயாளர்களின் தேவைக்கும் என எடுத்து வரும் பொலித்தீன் பைகள்,பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர்க் கோம்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை வைத்தியசாலை வளாகத்தில் விட்டுச் செல்லாதுதம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
வைத்தியசாலை வளாகத்தினுள் வெற்றிலை,சிகரெட்,மதுபானம், உள்ளடங்கிய போதைப் பொருட்களை எடுத்து வருவது,பாவிப்பது,நோயாளர்களுக்கு வழங்குவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.
சிறுவர்கள், முதியவர்கள் மிக இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் இவர்கள் இயன்றவரை விடுதிகளில் பார்வையாளர்களாக வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.தீவிர சிகிச்சைப் பிரிவு,அதி தீவிர சிகிச்சைப் பிரிவு,பிரசவவிடுதிகள்,
 குழந்தை விடுதிகள் போன்றவற்றில் சிகிச்சை பெறுபவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்குள் உள்ளதால் இயன்றவரை மேற்படி பகுதிக்கு பார்வையாளர்களாக வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
புதன், 28 அக்டோபர், 2015

கஞ்சா மீட்பு அதிரடிப் படை உத்தியோகத்தரின் வாகனத்திலிருந்து ! சந்தேக நபர் கைது

அதிரடிப் படையினரின் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சாவினை அடுத்து குறித்த வாகனத்தினை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் யாழ்.பண்ணை பகுதியில் நின்ற வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 30g கேரள கஞ்சா யாழ்.பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வாகனத்தை ஓட்டி வந்தவரையே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்.பொலிஸார் நேற்றய தினம் தெரிவித்திருந்தனர்
இந்நிலையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்ட வாகனம் ஒரு அதிரடிப்படை உத்தியோகஸ்த்தரின் குடும்பத்தினர் பயணித்த வாகனம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
குறித்த வாகனம் யாருடையது என்பதை முன்னதாகவே அறிந்திருந்த பொலிஸார் அந்த விடயம் ஊடகங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் கைதான நபர் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு அருளானந்தம் அபிதா..24.10.15

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட
  அருளானந்தம் தம்பதிகளின்.  செல்வ  புதல்விஅபிதா தனது 
பதின் மூன்றாவது  பிறந்த நாளை. 24.10.15.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தங்கை மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று
அன்பிலும் அறத்திலும் நிறைந்து
ஆல்போல் நீ என்றும் படர்ந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற 
சகல கலைக்கும் பெற்று 
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ 
இணையமும். நிலாவரை இணையமும்
 வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

வீட்டிஇன் கூரையை பிரித்துத் திருடிய மருமகள் விளக்க மறியலில்

யாழ்.சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் வீட்டில் மாமியார் இல்லாத நேரம் பார்த்து ஏணி வைத்து ஏறிக் கூரை பிரித்துத் திருடிய மருமகளை எதிர்வரும் -30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று முன்தினம் 19 ஆம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
19 வயதுடைய மருமகள்  கடந்த ஆகஸ்ட்-16 ஆம் திகதி வீட்டின் கூரை பிரித்து உள்ளிறங்கி அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணம்,மடிக் கணணி மற்றும் கவரிங் நகைகள் ,சிம் அட்டை என்பவற்றைத் திருடியுள்ளார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்துத் திருட்டுப் போன சிம் அட்டையின் பாவனை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவ்வீட்டின் மருமகள் முறையிலான பெண்ணொருவரைக் கடந்த -18 ஆம் திகதி கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் திருடியதைக் குறித்த பெண்மணி ஒப்புக் கொண்டுள்ளதுடன் திருடிய பொருட்களைத் தன் காதலனுக்குக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அவற்றைப் பறிமுதல் செய்த பொலிசார் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளமையும் 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 20 அக்டோபர், 2015

நம்பத்தகுந்த ஆதாரம் இல்லையாம் பாலியல் இலஞ்சம் கோரியதற்கு!!!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் எழுத்து மூல முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு குறித்து, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால், விசாரணைகள் 
மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் இரண்டாவது முறையாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரால் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரக பிரதிநிதியும் இணைந்து கொண்டார். குறித்த குழுவினர்
 முறைப்பாடு
 முன்வைத்த பெண் உள்ளிட்ட பலரிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து குறித்த குழுவினர் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில்
 கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 19 அக்டோபர், 2015

ரயில் தடம்புரண்டதில்யாழ் ரயில் சேவை ரத்து``

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரவு நேர தபால் ரயில்கள் நான்கு இன்றையதினம் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசந்துறை மற்றும் தலைமன்னார் நோக்கி செல்லும் ரயில்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே முனபதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்களின் பணம் மீளவழங்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் 
தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல – கல்கமுவ வரையான பகுதியில் இன்று பிற்பகல் 03.45 அளவில் ரயிலொன்று தடம்புரண்டதில் வட பகுதிக்கான ரயில் போக்குவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 13 அக்டோபர், 2015

போக்குவரத்து அமைச்சின் அதிரடி தீர்மானம் ???

அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்த அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டங்களை வகுப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு தற்போது 10,000 ரூபா வரை அபராதம் 
விதிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மாணவிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து யார்? திடுக்கிடும் தகவல்.

இது எமது செய்திச் சேவைக்கு பெண் ஒருவரால் அனுப்பப்பட்ட ஒலி வடிவம். தோடம்பழத்திற்குள் போதை மருந்து ஏற்றி 42 மாணவிகளை சீரழித்தது உண்மையா என்பது
உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் இதில் குறிப்பிடப்பட்ட போதைப் பொருளால் பெண்கள் தமது நிதானத்தை இழந்து
தம்மை இழக்கின்றனர் என்பது உண்மை. தயவு செய்து மற்றவர்களுக்கும் இதனை பகிர்ந்து எம் சமூகத்தைக் காப்பாற்றம் காலத்தின் கட்டாயத்தில் ஒவ் வெரு தமிழணும் விரைந்து செயற்படு தமிழா.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 10 அக்டோபர், 2015

மன்னார் அலபிட்டி பிரதேச மக்கள் குடிநீருக்காக காத்திருக்கின்றார்கள் !

யுத்தம் எங்கள் குடிநீரையும் கொண்டு சென்றுவிட்டது என்றும், தாங்கள் தினம் குடிப்பதற்கே நீரின்றி கஷ்டப்படுவதாகவும் மன்னார் அலம்பிட்டி பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக  மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் அலபிட்டி கிராம மக்கள் தெரிவிக்கையில்,
ஜம்பது வருடங்களுக்கு மேலாக இக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம். கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கிராமத்தை விட்டு 
வெளியேறி பின் மீண்டும மீள்குடியேறினோம்.
எங்களில் பல குடும்பங்கள் 1990ல் ஏற்பட்ட யுத்த அசாதாரண சுழ்நிலை காரணமாக வெளியேறி இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக வாழ்துவருகின்றனர்.
எனினும் மீள்குடியேறியுள்ள எங்களுக்கு அடிப்படை வசதிகளை சரியான முறையில் வழங்கவில்லை என கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குடிநீர் இல்லாத நிலையில் பொது மக்கள் பல்வேறு அசௌவுகரியங்களுக்கு முகம் கொடுத்து 
வருகின்றோம்.
மன்னார் பிரதே சபை பவுசர் மூலம் நீரை வழங்கி வருவதாக கூறப்பட்டாலும்  நீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதேவேளை இங்கு கிணறு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது எனினும் அக்கிணற்றில் நீர் வற்றிய நிலையிலேயே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடு
கின்றனர்.
தற்போது இக்கிராமத்தில் 11 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு சிறிய கிராமம் என்பதால் அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என கவலை 
அடைந்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், அதிகாரிகளின் அசமந்த போக்கால் எதுவும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கின்றர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
செவ்வாய், 6 அக்டோபர், 2015

கடற்கரையிலிருந்து 13 அடி நீளம் கொண்ட முதலை மீட்பு

காலி முகத்திடல் கடற்கரைப் பகுதியிலிருந்து மிதந்து கொண்டிருந்த 13 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று வனஜீவராசிகள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலை 13 அடி நீளம் கொண்டது என மேலும் அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த முதலையை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கடலில் இடிமின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக கடலுக்கு சென்ற ஒருவர் இடி மின்னல் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் குருநகர் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் குருநகரில் இருந்து இறால் பிடிப்பதற்காக படகில் சென்றவர்கள் அதிகாலையில் தொழிலை முடித்து வீடு திரும்பியுள்ளார்கள். இந்த நேரத்தில் கடலிலும் அதிக மழை பெய்ததுடன் இடி மின்னலும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலில் படகின் இயந்திரத்தை செலுத்தி வந்த யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த  ஜஸ்ரின்யூட்; கனிஸ்டன் என்பவர் இடி மின்னல் தாக்கியதில் தலையிலும் முகத்திலும் காயத்திற்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார். இவருடைய மரண விசாரணை நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>

வியாழன், 1 அக்டோபர், 2015

இம்முறை யாழில் சிறுவர் தின கொண்டாட்டங்கள்

சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வுகள் இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது. இம் முறை யாழில் நடைபெறும் தேசிய சிறுவர் தின நிகழ்வில் பலரும் கலந்து கொள்ளவுள்ள அதே வேளையில் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று தினங்களும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களை மகிழ்வூட்டும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பிப்பதற்காக அமைச்சர்கள் பலரும் இன்றையதினம் வருகை தரவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சிறுவர் தினமான இன்று தேசிய சிறுவர் தின நிகழ்வுகளை இம் முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்திருந்தது. இதற்கமைய இந்த முறை சிறுவர் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளது.
சிறுவர்களுக்கு நட்புறவான சூழல் – உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்” உலக சிறுவர் தின நிகழ்ச்சி 2015 எனும் கருப் பொருளிலில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரராணி பண்டார தலைமையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் சிறுவர் விவகார இராஐங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அரச அதிகாரிகள் பொண்கள் சிறுவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வுகளிற்கு ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வருகை தரவிருந்த போதும் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தரவில்லை. இதனாலேயே இந் நிகழ்விற்கு அமைச்சர்கள் பலரும் வருகை தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பகட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து இதன் போது சிறுவர்களின் பல்வேறு கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமிய நிகழ்வுகளும் நடக்கவிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் மாலை யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய பூங்கா வளாகத்தில் சிறுவர்கள் தொடர்பிலான பிரச்சனையும் அதற்கான பாதுகாப்பும் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்டபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வாக அதே இடத்திலேயே சிறுவர்களுக்கான மகிழ்வுட்டல் நிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் வைக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இறுதி நாள் நிகழ்வாக மல்லாகம் மத்திய கல்லூரியில் மருத்துவ முகாமொன்றும் நடைபெறவிருக்கின்றது.
அதேவேளையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவர்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு 
விடுக்கப்பட்டள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை