இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் எழுத்து மூல முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு குறித்து, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால், விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் இரண்டாவது முறையாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரால் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதரக பிரதிநிதியும் இணைந்து கொண்டார். குறித்த குழுவினர்
முறைப்பாடு
முன்வைத்த பெண் உள்ளிட்ட பலரிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து குறித்த குழுவினர் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நம்பத்தகுந்த ஆதாரங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக