அதிரடிப் படையினரின் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சாவினை அடுத்து குறித்த வாகனத்தினை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் யாழ்.பண்ணை பகுதியில் நின்ற வாகனம் ஒன்றை சோதனையிட்டபோது அதிலிருந்து 30g கேரள கஞ்சா யாழ்.பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வாகனத்தை ஓட்டி வந்தவரையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்.பொலிஸார் நேற்றய தினம் தெரிவித்திருந்தனர்
இந்நிலையில் குறித்த கஞ்சா மீட்கப்பட்ட வாகனம் ஒரு அதிரடிப்படை உத்தியோகஸ்த்தரின் குடும்பத்தினர் பயணித்த வாகனம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
குறித்த வாகனம் யாருடையது என்பதை முன்னதாகவே அறிந்திருந்த பொலிஸார் அந்த விடயம் ஊடகங்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் கைதான நபர் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக