இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக கடலுக்கு சென்ற ஒருவர் இடி மின்னல் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் குருநகர் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
நேற்று சனிக்கிழமை பிற்பகல் குருநகரில் இருந்து இறால் பிடிப்பதற்காக படகில் சென்றவர்கள் அதிகாலையில் தொழிலை முடித்து வீடு திரும்பியுள்ளார்கள். இந்த நேரத்தில் கடலிலும் அதிக மழை பெய்ததுடன் இடி மின்னலும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலில் படகின் இயந்திரத்தை செலுத்தி வந்த யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்ரின்யூட்; கனிஸ்டன் என்பவர் இடி மின்னல் தாக்கியதில் தலையிலும் முகத்திலும் காயத்திற்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார். இவருடைய மரண விசாரணை நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக