siruppiddy

வியாழன், 1 அக்டோபர், 2015

இம்முறை யாழில் சிறுவர் தின கொண்டாட்டங்கள்

சர்வதேச சிறுவர் தின தேசிய நிகழ்வுகள் இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது. இம் முறை யாழில் நடைபெறும் தேசிய சிறுவர் தின நிகழ்வில் பலரும் கலந்து கொள்ளவுள்ள அதே வேளையில் பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று தினங்களும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களை மகிழ்வூட்டும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாகவும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பிப்பதற்காக அமைச்சர்கள் பலரும் இன்றையதினம் வருகை தரவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சிறுவர் தினமான இன்று தேசிய சிறுவர் தின நிகழ்வுகளை இம் முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்திருந்தது. இதற்கமைய இந்த முறை சிறுவர் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளது.
சிறுவர்களுக்கு நட்புறவான சூழல் – உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்” உலக சிறுவர் தின நிகழ்ச்சி 2015 எனும் கருப் பொருளிலில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரராணி பண்டார தலைமையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் சிறுவர் விவகார இராஐங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அரச அதிகாரிகள் பொண்கள் சிறுவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வுகளிற்கு ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வருகை தரவிருந்த போதும் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வருகை தரவில்லை. இதனாலேயே இந் நிகழ்விற்கு அமைச்சர்கள் பலரும் வருகை தரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பகட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து இதன் போது சிறுவர்களின் பல்வேறு கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமிய நிகழ்வுகளும் நடக்கவிருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து இன்றையதினம் மாலை யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய பூங்கா வளாகத்தில் சிறுவர்கள் தொடர்பிலான பிரச்சனையும் அதற்கான பாதுகாப்பும் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்டபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வாக அதே இடத்திலேயே சிறுவர்களுக்கான மகிழ்வுட்டல் நிகழ்வுகளும் சிறுவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் வைக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இறுதி நாள் நிகழ்வாக மல்லாகம் மத்திய கல்லூரியில் மருத்துவ முகாமொன்றும் நடைபெறவிருக்கின்றது.
அதேவேளையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறுவர்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு 
விடுக்கப்பட்டள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை