siruppiddy

புதன், 24 ஆகஸ்ட், 2016

சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - நூல் வெளியீடு ¨!

யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - 24 வெளியீட்டு விழா 24.08.2012.இன்று யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை 
முன்னிட்டு
 வருடந்தோறும் "நல்லைக் குமரன்" நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகர சபை ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ.வாகீசன் தலைமையில்
 இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக துனைத்தூதுவர் ஆ.நடராஐன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
மேலும் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் வீனா கான குரு பீட பீடாதிபதியுமான வாசுதேவக் குருக்கள்,சின்மயா மிசன் ஆச்சாரியர் ஜாக்ரத சைத்தன்ய சுவாமிகள், துர்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகி்யோர் ஆசியுரை வழங்கினார்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 3 ஆகஸ்ட், 2016

இலங்கையர்கள்ஐரோப்பியரை விட அதிகமாக மது அருந்துகின்றனர்

 ஐரோப்பியரை விட  அதிகமாக மது அருந்தும் இலங்கையர்கள்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார்.

இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீதமான மக்கள் மதுபானத்தை அருந்துகின்றனர்.

இலங்கையில் 37.1 வீதமான ஆண்களும் 2.4 வீதமான பெண்களும் 40 ஆயிரம் இளையோரும் மதுபானத்தை அருந்துகின்றனர்.

பெண்கள் மதுபானத்தை அருந்துவது 1.2 வீதத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது எனவும் பாலித அபேகோன் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

குழந்தை தாய்ப்பால்அருந்தும்போது மூச்சுத்திணறி மரணம்

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச்
 சென்றுள்ளார்.
எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை