siruppiddy

புதன், 29 ஏப்ரல், 2015

மூன்று பிள்ளைகளின் தாய் கிணற்றினுள் தவறி வீழ்ந்து பலி

உடுவில், மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை  கிணற்றுக்குள் நீர் அள்ளும் போது தவறி வீழ்ந்த மூன்று பிள்ளைகளின் தாய், உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனந்தகுமார் வசந்தா (வயது 38) என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
வலிப்பு ஏற்பட்டமையாலேயே இவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 ஏப்ரல், 2015

அமரர் திரு பாலசிங்கம் திலகவதி 1ம்ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு பாலசிங்கம் திலகவதி 
தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு :06.05.2014         
                      திதி "அட்டமி 
திதி : நாள்.26..சித்திரை .2015   
"அன்னாரின் நினைவஞ்சலி**  ஆத்ம சாந்திப்பிரத்தனை அழைப்பிதழ் .
யாழ்.அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் 
திரு பாலசிங்கம் திலகவதி  அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் 
ஆத்ம சாந்திப்பிராத்தனையும்  .
  எதிர் வரும் 26.04..2015  ஞாயிற்ருக்கிழமை  நவக்கிரியில் அவரது  இல்லத்தில்  நடைபெறும் அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து அன்னாரின் நினைவஞ்சலிஇலும் ஆத்மாசாந்திப்பிரத்தனயிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நன்றி 
 அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய  குடும்ப தினரும் நவக்கிரி உறவுகளும் அல்வாய் உறவினர்கள் நண்பர்களும்
இறை வனைபிராத்திக் கின்றனர்   .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
இங்கனம்..
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 18 ஏப்ரல், 2015

ஆயுத முனையில் வயோதிப தம்பதிகளிடம் கொள்ளை!!!

 குப்பிளானில் வயோதிப தம்பதிகளிடம் ஆயுத முனையில் பல இலட்சம் கொள்ளை
யாழ்ப்பாணம்- குப்பிளான் வடக்குக் கேணியடிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17.04.2015) வயோதிபதித் தம்பதியினரை ஆயுத முனையில் மிரட்டிப் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதன்பின் திருடர்கள் தப்பிச் சென்றதாக இன்று காலை வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபத் தம்பதியினர் இருவரும் நீண்டகாலமாகத் தனிமையில் வசித்து வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டிலுள்ள பிரதான மின் ஆளியை நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர்
 துப்பாக்கி மற்றும் கூரிய வாள்களைக் காட்டி வயோதிபத் தம்பதியினரை அச்சுறுத்தியுள்ளனர்.
இதன் போது மின்விளக்கை ஒளிரச் செய்யச் சென்ற தனது கணவருக்குக் கன்னத்தில் பலமாகத் தாக்கியதுடன் தொலைபேசியை இயக்க முயன்ற தனக்கும் வாயில் துப்பாக்கியால் தாக்கியதாக வீட்டு உரிமையாளரான பெண்மணி தெரிவித்தார்.
சத்தம் போட்டால் வாளால் வெட்டுவோம், தாக்குவோம் என மிரட்டிய திருடர்கள் அதன் பின்னர் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.
வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பதரைப் பவுண் தாலிக்கொடி, நான்கு பவுண் காப்பு, 2 பவுண் மோதிரம், ஒரு இலட்சம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வீட்டின் சமையலறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணமே இதன் போது பறி போனதாகத் தெரிவித்த பெண்மணி தனது கணவர் அணிந்திருந்த மோதிரத்தை மிரட்டிக் கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
திருடர்கள் வீடுடைத்து உள்ளே நுழைந்தமைக்கான தடயங்கள் எதுவும் காணப்படாத நிலையில் திருடர்கள் நேற்று மாலையே வீட்டில் வந்து பதுங்கியிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமனைகள் நெருக்கமாகவுள்ள பகுதியில் ஆயுத முனையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றமை அப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் இதே பகுதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றில் ஓடு பிரித்துச் சுமார் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திருட்டுத் தொடர்பிலும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.
இந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஆயுத முனையிலான கொள்ளைச் சம்பவத்தால் தாமும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்த குப்பிளான் பகுதிப் பொதுமக்கள் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நீரில் எண்ணெய்விடயம் பற்றிய இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே முடிவு ???

 சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ள விடயம் தொடர்பில், இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே தீர்க்கமான முடிவை எடுக்க முடியுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீரில் எண்ணெய் மற்றும் கழிவெண்ணை கலக்கப்பட்டுள்ளமை மக்களால் அவதானிக்கப்பட்ட போதிலும், அதனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானத்திற்கு வர முடியாதென சி.வி விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
சுன்னாகம் நீர்ப் பிரச்சினை தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர், ஆளுனர், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 6 ஏப்ரல், 2015

நாய்க்கு எதிராக ஆச்சி ஒருவர் முறைப்பாடு


 யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக  75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை  விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி 
பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
மேற்படி வீட்டில் 3 நாய்கள் வளர்க்கப்படுவதாகவும்,
 அவற்றில் இரண்டு நாய்களுக்கு விசர் நாய் தடுப்பூசி ஏற்றப்படவில்லையென மூதாட்டி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.முறைப்பாட்டை தெரிவித்த மூதாட்டி அதன் பின்னர் அச்சுவேலி வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

திருடன் மீது பரிதாபம் காட்டியவர் மீது தாக்குதல்!!

நீர்வேலியில்வழைக்குலை திருடிய திருடனை தோட்டக்காரர்கள் சேர்ந்து பிடித்து கட்டிவைத்திருந்த போது அவனது கட்டை அவிழ்த்து தப்ப விட்ட இன்னொரு தோட்டக்காரர் மீது தாக்குதல்
 மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்வேலியில் இன்று அதிகாலை வாழைக்குலைகள் இரண்டைத் திருடி  சைக்கிளில் ஏற்றி தனது தோட்டத்தினுாடாக வருவதை அவதானித்த அப் பகுதித் தோட்டக்காரர் அவனை இன்னொருவருடன் சேர்ந்து பிடித்து  மரத்தில் கட்டி கடுமையாகத் தாக்கிவிட்டு மற்றவர்களுக்கு தகவல்  சொல்வதற்காக சென்றுள்ளனர்.
இதே வேளை அவ்வழியால் கோவிலுக்கு போவதற்காக வந்த அதே பகுதி தோட்டக்காரர் ஒருவரிடம் திருடன் பிடிபட்ட கதையை தெரிவித்து அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளனர்.
திருடனை அவதானித்த குறித்த தோட்டக்காரர் அவனது முகத்தால் இரத்தம் வருவதைப் பார்த்ததுடன் அவனது கெஞ்சல்களினால் பரிதாபப்பட்டு அவனது கட்டுகளை அவிழ்த்து அவனை விடுவித்துள்ளார்.
ஊரவர்களுடன் அங்கு வந்த மற்றைய தோட்டக்காரர்கள் அங்கு திருடன் இல்லாத நிலையில் எவ்வாறு தப்பிச் சென்றான் 
என தப்பவிட்டவரிடம் கேட்ட போது ’அவனைப் பார்க்க பாவமாக இருந்ததால் தப்பவிட்டேன்’ என கூறியுள்ளார் தப்பவிட்ட தோட்டக்காரன்.
இதனால்  ஆத்திரம் அடைந்தவர்கள் அவரை கயிற்றினாலும் குளாய்களினாலும் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான தோட்டக்காரர் தெரிவித்துள்ளார்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை