siruppiddy

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

திருடன் மீது பரிதாபம் காட்டியவர் மீது தாக்குதல்!!

நீர்வேலியில்வழைக்குலை திருடிய திருடனை தோட்டக்காரர்கள் சேர்ந்து பிடித்து கட்டிவைத்திருந்த போது அவனது கட்டை அவிழ்த்து தப்ப விட்ட இன்னொரு தோட்டக்காரர் மீது தாக்குதல்
 மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்வேலியில் இன்று அதிகாலை வாழைக்குலைகள் இரண்டைத் திருடி  சைக்கிளில் ஏற்றி தனது தோட்டத்தினுாடாக வருவதை அவதானித்த அப் பகுதித் தோட்டக்காரர் அவனை இன்னொருவருடன் சேர்ந்து பிடித்து  மரத்தில் கட்டி கடுமையாகத் தாக்கிவிட்டு மற்றவர்களுக்கு தகவல்  சொல்வதற்காக சென்றுள்ளனர்.
இதே வேளை அவ்வழியால் கோவிலுக்கு போவதற்காக வந்த அதே பகுதி தோட்டக்காரர் ஒருவரிடம் திருடன் பிடிபட்ட கதையை தெரிவித்து அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளனர்.
திருடனை அவதானித்த குறித்த தோட்டக்காரர் அவனது முகத்தால் இரத்தம் வருவதைப் பார்த்ததுடன் அவனது கெஞ்சல்களினால் பரிதாபப்பட்டு அவனது கட்டுகளை அவிழ்த்து அவனை விடுவித்துள்ளார்.
ஊரவர்களுடன் அங்கு வந்த மற்றைய தோட்டக்காரர்கள் அங்கு திருடன் இல்லாத நிலையில் எவ்வாறு தப்பிச் சென்றான் 
என தப்பவிட்டவரிடம் கேட்ட போது ’அவனைப் பார்க்க பாவமாக இருந்ததால் தப்பவிட்டேன்’ என கூறியுள்ளார் தப்பவிட்ட தோட்டக்காரன்.
இதனால்  ஆத்திரம் அடைந்தவர்கள் அவரை கயிற்றினாலும் குளாய்களினாலும் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளான தோட்டக்காரர் தெரிவித்துள்ளார்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை