சமையலறையில் குக்கர் வெடித்து சிதறி வீடு முழுவதும் தீபற்றியதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Brooklyn என்ற இடத்தில் Gayle Sassoon(45) என்பவர் தனது கணவர் மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
யூத மதத்தை சேர்ந்த இவர்களின் மதக்கோட்பாடுகள் படி, ‘சபாத்’ அன்று,வெள்ளிக்கிழமை சூரியன் மறைவது முதல், சனிக்கிழமை சூரியன் மறைவது வரை வீட்டில் சமையல் உள்பட எந்த வேலையும் செய்யக்கூடாது.’சபாத்’ நாளில் புதிதாக சமையல் செய்யாமல், ஏற்கனவே உள்ள உணவை மிதமாக சூடுபடுத்தி உண்பார்கள்
இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டில் முதல் மாடியில் இருந்த சமையல் அறையில் Gayle Sassoon உணவை சூடுபடுத்த மின்சார அடுப்பில் இருந்த தட்டில் உணவை வைத்து சூடுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அவரது குழந்தைகள் 7 பேர் தூங்கிகொண்டு இருந்துள்ளனர். மளமளவென்று பரவிய தீ குழந்தைகளின் அறையை சூழ்ந்து பற்றி எரிந்துள்ளது.
இந்த திடீர் தீவிபத்தில் சிக்கி பலத்த தீக்காயங்களுடன் சசூன் மற்றும் அவரது 14 வயது மகளும் சமையல் அறை ஜன்னல் வழியாக எட்டி குதித்தனர். ஆனால், இரண்டாவது அறையிலிருந்து தப்பிக்க முடியாத 7 குழந்தைகளும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததும் சுமார் 105 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இறந்த குழந்தைகள் 7 பேரும் 5 முதல் 16 வயதுடையவர்கள்.
பலத்த தீக்காயங்களுடன் தப்பிய தாயாரும், மகளும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தீவிபத்து நிகழ்ந்தபோது தந்தை வெளியே சென்று இருந்ததால், விபத்திலிருந்து தப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக