siruppiddy

ஞாயிறு, 8 மார்ச், 2015

பெண்­மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் ´தாக்­குதல்


யாழ்ப்­பாணம் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வைத்து பெண்­ணொ­ருவர் மூர்க்­கத்­த­ன­மான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது.
இந்தச் சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தாவது,
கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் பிணக்கு ஒன்­றி­னை­ய­டத்து குறித்த பெண் மீது மற்­றொ­ருவர் முறைப்­பாடு செய­துள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த பெண்ணை நேற்று முற்­பகல் 11 மணிக்கு விசா­ர­ணைக்­கு­வ­ரு­மாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த விசா­ர­ணைக்­கான கடி­தமும் முறைப்­பாடு செய்­த­வ­ரி­டமே பொலி­ஸா­ரினால் கொடுக்­கப்­பட்டு சம்­பந்­தப்ட்ட பெண்ணிடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இறு­தி­நே­ரத்­தில கிடைத்த அழைப்­பை­ய­டுத்து குறித்த பெண் நேற்று நண்­பகல் 12 மணி­ய­ளவில் பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­றுள்ளார்.
உரிய நேரத்­துக்கு விசா­ர­ணைக்­காக வரு­கை­த­ராமை தொடர்பில் குறித்த பிணக்கை விசா­ரிக்கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பெண்ணை ஏசி­யுள்ளார்.
விசா­ர­ணைக்கு பொலிஸார் உரிய முறையில் அழைப்பு விடுத்­தி­ருக்க வேண்டும். முறைப்­பாடு செய்­த­வ­ரி­டமே அழைப்புக்கான கடிதம் வழங்­கப்­பட்­டமை தவ­றா­னது.
அத்­துடன் இறு­தி­நே­ரத்­தி­லேயே இந்த அழைப்பு எனக்கு கிடைத்­தி­ருந்­தது. இத­னால்தான் வருகை தரு­வ­தற்கு கால­தா­மதம் சென்­றது என்று இந்தப் பெண்ணும் வாதிட்­டுள்ளார்.
இத­னை­ய­டுத்து ஆத்­தி­ர­ம­டைந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கதி­ரை­யி­லி­ருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்­குதல் நடத்­தி­யுள்ளார்.
இத­னைத்­தொ­டர்ந்து ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலரும் பெண்ணின் தலை­ம­யிரைப் பிடித்­தி­ழுத்து கொடூ­ர­மாக தாக்­கி­யுள்­ளனர். கத­றக்­க­தற தாக்­குதல் நடத்­திய பொலிஸார் பெண்ணை சிறைக்­கூண்­டுக்குள் அடைத்­துள்­ளனர்.
இந்தச் சம்­ப­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் நின்ற பொது­மக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்­துள்­ளனர். குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை