siruppiddy

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு!

    நாசா எச்சரிக்கை!!. சூரியனில் மிக வீரியமான பிழம்புகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அந்தச் சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய நடுக்கம் ஒவ்வொரு 11 ஆண்டு களுக்கும் உச்சத்தை அடையும். அப்போது அதன் பிழம்புகள் மிக வீரியத்துடன் இருக்கும். வெளிப்படும் சில நெருப்புப் பிழம்புகளின் அளவு பூமியின் அளவைப் போன்று 14 மடங்கு அதிகமாக இருக்கும். அதிலிருந்து கதிரியக்கமும் ஏற்படும்.
   இந்தச் சூரிய நடுக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா தன்னிடம் உள்ள 'சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி அண்ட் சோலார் ஹீலோஸ்பெரிக் அப்சர்வேட்டரி' எனும் கண்காணிப்புக் கருவி மூலம் சூரிய நடுக்கத்தை ஆராய்ந்து உறுதி செய்துள்ளது. இதுபற்றி நாசாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ஃபோக்ஸ் கூறும்போது, "இந்தச் சூரியப் பிழம்பு கள் பூமியில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் இதர தொலைதொடர்பு சிக்னல்களைப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
நாளடைவில் சூரியப் பிழம்புகள் குறைந்துகொண்டே வந்தாலும் கூட சூரிய நடுக்கம் அதன் குறைந்தபட்ச அளவை அடையும்வரை இந்த‌ப் பிழம்புகளின் தாக்கம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் மனிதர்களுக்கோ, பூமியில் உள்ள பிற உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தன் தரை, கடல் மற்றும் வான்வழி தொலைதொடர்பு சாதனங்க ளை எல்லாம் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

புதன், 27 ஆகஸ்ட், 2014

தோப்பு அச்சுவேலி கைத்தொழில் போட்டை திறப்பு!


                  இந்திய மற்றும் சிறீலங்கா அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ச இன்று திறந்துவைத்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அதிகார சபையின் ஏற்பாட்டில் அச்சுவேலியில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட இந்தக் கைத்தொழில் பேட்டையில் 22 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே.சிங்கா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி , பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா உட்பட மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் கைத்தொழில் பேட்டையின் மீள் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசு சிறிய நன்கொடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 225 மில்லியன் ரூபா நிதி உதவியையும் சிறீலங்கா அரசு 50 மில்லியன் ரூபா நிதியுதவியையும் வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

நவற்கிரி காலநிலை