சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது மற்றும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
சில சாரதி பயிற்சி நிலையங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக