siruppiddy

வெள்ளி, 27 மார்ச், 2015

குக்கர் வெடித்து சிதறி தீபற்றியதால், குழந்தைகள் பலி

சமையலறையில் குக்கர் வெடித்து சிதறி வீடு முழுவதும் தீபற்றியதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Brooklyn என்ற இடத்தில் Gayle Sassoon(45) என்பவர் தனது கணவர் மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
யூத மதத்தை சேர்ந்த இவர்களின் மதக்கோட்பாடுகள் படி, ‘சபாத்’ அன்று,வெள்ளிக்கிழமை சூரியன் மறைவது முதல், சனிக்கிழமை சூரியன் மறைவது வரை வீட்டில் சமையல் உள்பட எந்த வேலையும் செய்யக்கூடாது.
’சபாத்’ நாளில் புதிதாக சமையல் செய்யாமல், ஏற்கனவே உள்ள உணவை மிதமாக சூடுபடுத்தி உண்பார்கள்
இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டில் முதல் மாடியில் இருந்த சமையல் அறையில் Gayle Sassoon உணவை சூடுபடுத்த மின்சார அடுப்பில் இருந்த தட்டில் உணவை வைத்து சூடுபடுத்தியுள்ளார்.

அப்போது மின்சார அடுப்பில் கோளாறு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. சமையல் அறை முழுவதும் பற்றிய தீ வேகமாக அடுத்தடுத்த அறைகளுக்கு பரவியது.
இந்நிலையில் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அவரது குழந்தைகள் 7 பேர் தூங்கிகொண்டு இருந்துள்ளனர். மளமளவென்று பரவிய தீ குழந்தைகளின் அறையை சூழ்ந்து பற்றி எரிந்துள்ளது.
இந்த திடீர் தீவிபத்தில் சிக்கி பலத்த தீக்காயங்களுடன் சசூன் மற்றும் அவரது 14 வயது மகளும் சமையல் அறை ஜன்னல் வழியாக எட்டி குதித்தனர். ஆனால், இரண்டாவது அறையிலிருந்து தப்பிக்க முடியாத 7 குழந்தைகளும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததும் சுமார் 105 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இறந்த குழந்தைகள் 7 பேரும் 5 முதல் 16 வயதுடையவர்கள்.
பலத்த தீக்காயங்களுடன் தப்பிய தாயாரும், மகளும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தீவிபத்து நிகழ்ந்தபோது தந்தை வெளியே சென்று இருந்ததால், விபத்திலிருந்து தப்பியுள்ளார்.

விபத்து குறித்து பேசிய நியூயோர்க் மேயர்  ஒரு அழகான மிகப்பெரிய குடும்பம் மோசமான தீவிபத்திற்கு பலியாகியுள்ளது மிகுந்த வேதனை தருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் நிகழ்ந்த தீவிபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

சிறுவன் படுகாயம்வெடிவிபத்தில் !!

வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். அதேயிடத்தைச் சேர்ந்த யோகன் கஜி (வயது 04) என்ற சிறுவனே வலது கையின் நான்கு விரல்களும் சிதைவடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வயல் நிலத்திலிருந்த பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த வெங்காய வெடியை வீட்டுக்கு எடுத்து வந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்துள்ளான். வேட்டைக்கு பய்னபடும் வெங்காய வெடி தடை செய்யப்பட்ட வெடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 மார்ச், 2015

இம் முறை வெங்காயபகிர்செய்கை அமோச விளைச்சல்

அச்சுவேலி பகுதி உள்ளிட்ட விவசாய பிரதேசங்களில் இம் முறை வெங்காயச் செய்கை அமோக விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
அச்சுவேலி தோப்பு, பத்த மேனி, ஆவரங்கால் போன்ற பிரதேசங்களில் உள்ள வெங்காயச் செய்கையாளர்கள் இம்முறை வெங்காயச் செய்கைக்கு
தேவையான காலநிலை சீராக காணப்பட்டதன் விளைவாக வெங்காயத்தின் விளைச்சல் உச்சக் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
தற்போது அறுவடை நிலையில் உள்ள வெங்காயங்கள் தோட்டங்களில் பிடுங்கி அடுக்கப்பட்டு வருவதுடன் சிலர் அடுக்கிய வெங்காயங்களை பிடிகட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

விருந்தினர்களுக்கு பனையோலை மாலை அணிவிப்பு

வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன.

வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு, வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது.

ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பது வழமையானது.

ஆனால், நேற்றய நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

நாய்களுக்கு நீர் வெறுப்பு தடுப்பூசி போடும் பணிகள்

யாழ் நாய்களுக்கு தடுப்பூசி ஏழாலையில் மும்முரம்  கடந்த வாரம் நாயினால் விராண்டப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நான்கு மாத கால இடைவெளியின் பின்னர் நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டுள்ளது என உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
மகிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நாய்கள் கொல்லப்படுவது தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் கட்டாக் காலி நாய்களின் தொல்லையும் வீதிக்கு வீதி அதிகரித்துக் காணப்படுகின்றது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 மார்ச், 2015

ஜீ-சி-ஈ-சாதரண-தரப்பரீட்சைப் பெறுபேறுகள் ஏபரல் முதலவாரத்தில்

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 மார்ச், 2015

பெண் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி மரணம்!!!

<
 யாழ்.வடமராட்சி பொலிகண்டியை சேர்ந்த  பெண் ஒருவர்   தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாஉயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டார்.
தான் வெளியில் சென்று வீடு திரும்பியபோது கதவு பூட்டியிருந்ததாகவும், மனைவி தீயில் எரிந்துகொண்டிருந்ததாகவும் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்து வைத்தியசாலையில் 
மனைவியை அனுமதித்ததாக கணவன்
 தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கூறினர். பெண்ணின் கணவரின் கைகளிலும் எரிகாயங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 8 மார்ச், 2015

பெண்­மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் ´தாக்­குதல்


யாழ்ப்­பாணம் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வைத்து பெண்­ணொ­ருவர் மூர்க்­கத்­த­ன­மான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது.
இந்தச் சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தாவது,
கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் பிணக்கு ஒன்­றி­னை­ய­டத்து குறித்த பெண் மீது மற்­றொ­ருவர் முறைப்­பாடு செய­துள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த பெண்ணை நேற்று முற்­பகல் 11 மணிக்கு விசா­ர­ணைக்­கு­வ­ரு­மாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த விசா­ர­ணைக்­கான கடி­தமும் முறைப்­பாடு செய்­த­வ­ரி­டமே பொலி­ஸா­ரினால் கொடுக்­கப்­பட்டு சம்­பந்­தப்ட்ட பெண்ணிடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இறு­தி­நே­ரத்­தில கிடைத்த அழைப்­பை­ய­டுத்து குறித்த பெண் நேற்று நண்­பகல் 12 மணி­ய­ளவில் பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­றுள்ளார்.
உரிய நேரத்­துக்கு விசா­ர­ணைக்­காக வரு­கை­த­ராமை தொடர்பில் குறித்த பிணக்கை விசா­ரிக்கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பெண்ணை ஏசி­யுள்ளார்.
விசா­ர­ணைக்கு பொலிஸார் உரிய முறையில் அழைப்பு விடுத்­தி­ருக்க வேண்டும். முறைப்­பாடு செய்­த­வ­ரி­டமே அழைப்புக்கான கடிதம் வழங்­கப்­பட்­டமை தவ­றா­னது.
அத்­துடன் இறு­தி­நே­ரத்­தி­லேயே இந்த அழைப்பு எனக்கு கிடைத்­தி­ருந்­தது. இத­னால்தான் வருகை தரு­வ­தற்கு கால­தா­மதம் சென்­றது என்று இந்தப் பெண்ணும் வாதிட்­டுள்ளார்.
இத­னை­ய­டுத்து ஆத்­தி­ர­ம­டைந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கதி­ரை­யி­லி­ருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்­குதல் நடத்­தி­யுள்ளார்.
இத­னைத்­தொ­டர்ந்து ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலரும் பெண்ணின் தலை­ம­யிரைப் பிடித்­தி­ழுத்து கொடூ­ர­மாக தாக்­கி­யுள்­ளனர். கத­றக்­க­தற தாக்­குதல் நடத்­திய பொலிஸார் பெண்ணை சிறைக்­கூண்­டுக்குள் அடைத்­துள்­ளனர்.
இந்தச் சம்­ப­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் நின்ற பொது­மக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்­துள்­ளனர். குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை