திருநெல்வேலி:
கலியாவூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்களுடன் பிறந்த அதிசய செம்மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமிடங்களில் இறந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த கலியாவூரை சேர்ந்தவர் பழனி, விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு செம்மறி ஆடு குட்டியை பிரசவிக்க முடியாமல் திணறியது. இதனையறிந்த பழனி, செம்மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவலப்பேரி கால்நடை மருந்தகத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு கால்நடை உதவி டாக்டர் முருகன், கால்நடை ஆய்வாளர் மணிகண்டன், பராமரிப்பு உதவியாளர் முத்துநாயகம் ஆகியோர் கொண்ட மருத்துவ குழு செம்மறி ஆட்டிற்கு சிகிச்சை அளித்ததால், ஒரு தலை.. இரண்டு உடல்.. எட்டு கால்களுடன் கூடி குட்டியை வெளியே எடுத்தனர். தாய் ஆடு நலமுடன் உள்ள போதிலும், அதிசய ஆட்டுக்குட்டி இறந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக