X கதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும், மருத்துவ செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றிலிருந்து வெளியாகும் சக்தியானது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பலத்த பாதுகாப்புக்களுடனேயே மருத்துவ சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இவற்றினை விடவும் அதிக சக்தி வாய்ந்த X கதிர்கள் அண்டவெளியில் உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நாசா விண்வெளி ஆய்வு மையம்
உறுதிப்படுத்தியுள்ளது.
2012ம் ஆண்டு நாசா நிறுவனம் மேற்கொண்ட DXL எனும் ராக்கெட்டினை விண்ணிற்று அனுப்பும் முயற்சியின் போது பால்வெளியில் குறைந்தளவு சக்தி உடைய X கதிர்கள் உருவாக்கப்படுகின்றமை
கண்டறியப்பட்டது.
எனினும் இவ்வகை கதிர்கள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன என்பதனை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் சய்திகள் >>>