siruppiddy

வியாழன், 27 அக்டோபர், 2016

யாழ் வலிகாம விவசாயிகள் கோவா செய்கையில் ஆர்வம் !

யாழ்.வலிகாமம் பகுதியில் மரக்கறிப் பயிர்ச்செய்கையான பெரும் போக கோவா செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி
 வருகின்றனர்.
புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குப்பிளான், ஏழாலை, குரும்பசிட்டி, கட்டுவன், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலப் பகுதியில் கோவா செய்கை பயிரிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோவா செய்கை இரண்டரை மாத காலத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.
கோவா செய்கையின் அதிகரித்த விளைச்சல் காரணமாகக் கடந்த வருடம் தம்மால் அதிக இலாபம் பெற முடிந்ததாக வலிகாமம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 24 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.16

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்   செல்வப்புதல்வி அபிதா தனது 
பதின் நான்காவது   பிறந்த நாளை. 24.10.16.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
உன் அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நீங்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரா ? அதில் மறைந்திருக்கும் ரகசியம்!

பொதுவாக நம்மில் அதிகமானோர் பயன்படுத்தி வருவது ஹெட்செட். நாம் அனைவரும் அதன் மூலம் பாடல்கள் கேட்கிறோம், படங்கள் பார்க்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யாரும் பெரிதாக சிந்திப்பதில்லை.
பயணத்தின் போதோ, நடந்து செல்லும் போது, அது ஏன் தூங்குவதற்கு முன்னர் கூட பலர் ஹெட்செட்டில் பாடல் கேட்டு வரும் பழக்கம் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் கேட்டால், ஹெட்செட் இல்லாமல் பாடல்களோ அல்லது படங்களோ பார்த்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக மாறிவிடும், அதன் காரணமாகவே ஹெட்செட் பயன்படுத்தவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
ஹெட்செட்டில் பாடல்கள் கேட்பது என்பது ஒரு பொழுது போக்கு என்பது மாறி, தற்போது அது ஒரு Style ஆக மாறியுள்ளது. ஆனால் அதில் இருக்கு பாதிப்புகளைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை, அது தெரிந்தால் ஹெட்செட் உபயோகிப்பதை சற்று யோசிப்பீர்கள்.
* தொடர்ந்து ஹெட்செட்டை பயன்படுத்திவந்தால் நமது காதில் ஜவ்வுகள் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக காது கேட்காத நிலை கூட ஏற்படும்.
* பொதுவாக 80-85 வரையிலான டெசிபலுக்கு மேற்பட்ட ஒலிகளை கேட்கும்போது நமது காதுகள் பலமாக பாதிக்கப்படுகின்றன.எனவே ஹெட்செட்களை குறைந்த ஒலி அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது.
* மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாதவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும் ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் காதுகளுக்கு ஓய்வு அளித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
* அடுத்தது ஹெட்செட்களை சுத்தமாக வைத்துகொள்வது. நம்மில் பலரும் இதை செய்ய தவறி விடுகிறோம். அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறோம்.
* அதேபோல் அடுத்தவர்களின் ஹெட்செட்களை நாமும் பயன்படுத்த கூடாது, நமக்கு சொந்தமானவற்றை மற்றவர்களுக்கு தரவும் கூடாது. இதன் மூலம் காதில் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவருக்கும் தொற்றிக்கொள்ளும்.
* ஹெட்செட்களில் இருந்து உற்பத்தியாகும்
 மின்காந்த அலைகள் தமது மூளையை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஹெட்செட்களை பயன்படுத்திகொண்டே சாலையில் செல்பவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
* எனவே வாகனம் ஓட்டும் போதோ சாலையில் நடந்துசெல்லும் போதோ ஹெட்செட்டை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடவேண்டும்.
* முடிந்தளவு ஹெட்செட்டில் பாட்டு கேட்பதை தவிர்த்துவிட்டு இயற்கையின் ஓசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள். இதன் மூலம் செவிகளுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு இனிமை 
ஏற்படக்கூடும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 14 அக்டோபர், 2016

எதிர் வரும் மார்ச் மாதம் முதல் எண்ணெய் விற்பனை க்கு புதிய நடைமுறை!

போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதியிடப்பட்ட அனைத்து எண்ணெய் வகைகளினதும் சில்லறை அல்லது மொத்த விற்ப னையின்போது சகல உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அவற்றின் தகவல்களை தெளிவாக அச்சிட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
பொருள் இலக்கம், உற்பத்தி திகதி, காலாவதி திகதி, அளவு, அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதி செய்யப்பட்டதாயின் இறக்குமதியாளர் பெயர் மற்றும் முகவரி, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாடு என்பன அச்சி டப்பட 
 வேண்டும்.
அத்துடன் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகை மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் பொதியிடப்பட்டி ருப்பின், உற்பத்தி திகதி, மற்றும் மீள் பொதியிடப்பட்ட திகதி என்பன குறிப்பிடப்பட
 வேண்டும்.
கலப்பு எண்ணெய் வகையாயின், அதில் அடங்கியுள்ள எண்ணெய் வகை மற்றும் அதன் விகிதம் தொடர்பான தகவல்களுடன், கலப்பு செய்யப்பட்ட எண்ணெய் என்ற அறிவித்தல் 
அச்சிடப்பட வேண்டும்.
நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக, “உணவுக்காக பயன்படுத்தப்படும் உறையிடப்பட்ட அல்லது பொதி செய்யப்ப ட்ட எண்ணெய்” என்ற பதம் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்ப ட்டுள்ளது.
இந்த கட்டளை, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் என்றும் அதிகார சபை
 சுட்டிக்காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 10 அக்டோபர், 2016

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 22500 பேரை நியமிக்க நடவடிக்கை!!.

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.
எனினும் மொத்தமாக நாடு தழுவிய ரீதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் 22,500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
விசேடமாக கிராமிய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிளம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக போதுமான ஆசிரியர்கள் மற்றும் வளங்கள் இல்லை.
இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரச பட்டதாரிகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களை ஆசிரியர் தொழிலுக்கு
 சேர்த்துக் கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமை கொண்ட உயர் தரம் சித்தி பெற்ற இளைஞர் – யுவதிகளை
 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுகின்ற விஞ்ஞான மற்றும் கலை பட்டமொன்றை பூர்த்தி செய்தவுடன் ஆசிரியர் 
சேவைக்கு 
இணைத்துக் கொள்வதற்கும், அதற்காக அரச வங்கி ஒன்றிலிருந்து 275,000 ரூபா கடன் தொகையொன்றை அவ்விளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கும், பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு தகைமை பெற்ற இளைஞர் யுவதிகள் பட்டப்பிடிப்பினை நிறைவு பெற்ற பின் 10 வருட காலத்துக்காக தம்மால் தெரிவு செய்யப்படும் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் குறைப்பாடுகளை கொண்ட பாடசாலைகளுக்கு ஆசிரியராக பணிபுரிவதற்கு முடியுமான வகையில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பிரதேசத்தில் ஆசிரியராக 10 வருடங்கள் பணிபுரிந்தால் பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் தொகை மீண்டும் அறவிடப்பட மாட்டாது. அதனடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக முதற் கட்டமாக இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகள் 5000 பேரை விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களாக இணைத்துக்
 கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
 வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரச பாடசாலைகளில் தற்போது காணப்படும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி பட்டதாரிகளை விரைவில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும்
 தீர்மானிக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>நவற்கிரி காலநிலை