போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதியிடப்பட்ட அனைத்து எண்ணெய் வகைகளினதும் சில்லறை அல்லது மொத்த விற்ப னையின்போது சகல உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அவற்றின் தகவல்களை தெளிவாக அச்சிட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
பொருள் இலக்கம், உற்பத்தி திகதி, காலாவதி திகதி, அளவு, அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதி செய்யப்பட்டதாயின் இறக்குமதியாளர் பெயர் மற்றும் முகவரி, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாடு என்பன அச்சி டப்பட
வேண்டும்.
அத்துடன் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகை மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் பொதியிடப்பட்டி ருப்பின், உற்பத்தி திகதி, மற்றும் மீள் பொதியிடப்பட்ட திகதி என்பன குறிப்பிடப்பட
வேண்டும்.
கலப்பு எண்ணெய் வகையாயின், அதில் அடங்கியுள்ள எண்ணெய் வகை மற்றும் அதன் விகிதம் தொடர்பான தகவல்களுடன், கலப்பு செய்யப்பட்ட எண்ணெய் என்ற அறிவித்தல்
அச்சிடப்பட வேண்டும்.
நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக, “உணவுக்காக பயன்படுத்தப்படும் உறையிடப்பட்ட அல்லது பொதி செய்யப்ப ட்ட எண்ணெய்” என்ற பதம் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்ப ட்டுள்ளது.
இந்த கட்டளை, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் என்றும் அதிகார சபை
சுட்டிக்காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக