siruppiddy

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பூசணிக்காயை உடைக்காமலே கள் எத்தனை விதை இருக்கிறது என்பதை கூற முடியுமா?

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ....?
முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.
"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்
"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் 
எண்ணிக்கையாகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் 
எண்ணிக்கை 810 ஆகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

இவர் முட்டையை வைத்துசெய்கின்ற வித்தையை பாருங்க!!!


முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு.
எனவே இதனை பற்றிய தந்திரங்களை இவர் பட்டியலிட்டு காண்பிக்கின்றார். ஒரு முட்டையை சமபடுத்துவது எப்படி, எளிதாக முட்டையில் உள்ள மஞ்சள் கருவை நீக்குவது எப்படி என்று செய்து காட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி நிமிடங்களில் மென்மையான வேகவைத்த முட்டை செய்வது , முட்டைகளை இன்னும் நல்ல உறுதி செய்யவது எப்படி என்பது பற்றியும் இதில் உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நாம் செருப்பு வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!!

செருப்புகள் வாங்கும்போது மிகவும் கவனமாக வாங்கவேண்டும், ஏனெனில் காலுக்கு மாறான செருப்புகளால் நிச்சயம் சில உடல்நலப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
காலின் பாதுகாப்புக்குத்தான் செருப்பு அணிகிறோம் என்ற நிலை மாறி, அழகுக்காக அணிகிறோம் என்ற நிலை வந்துவிட்டதால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில், அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும்.
அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.
வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் எங்கு சென்றாலும் செருப்புடன் செல்வது நல்லது, ஏனெனில் உங்கள் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டால், அது குணமாவது கடினமாகும்.
செருப்புகளின் எடை அதிகமாக இருக்கக் கூடாது
அதிக நேரம் காத்திருக்க வேண்டிய இடத்துக்குப் போகும் போது அதிக உயரம் இல்லாத செருப்பை அணியவும்.
இதே போல இண்டர்வியூக்கு செல்லும் போது ஸ்ட்ராப் உள்ள செருப்புகளையே அணியவும்.
குளிர் காலத்தில் பாதத்தை ஒட்டிய படி இருக்கும் செருப்புகளையும், மழைக் காலத்தில் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணியவும். கோடைக் காலத்தில் காற்றோட்டமான செருப்பு அணியவும்.
வயதானவர்களுக்கு மென்மையான செருப்புகளை அணியுங்கள்.
மழைக் காலத்தில் செருப்பை வெளியில் உலர வைத்து பின்பு, பிளாஸ்டிக் சுவரில் அல்லது பிளாஸ்டிக் தாளில் மூடி ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும்.
வீடு மற்றும் வெளியே அணிந்து செல்லும் காலணிகளை தனித் தனியே வைக்கவும்.
ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா, கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா, ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதே சமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
செவ்வாய், 15 டிசம்பர், 2015

இலங்கைக்கு மீண்டும்44பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்???

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்று காலை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்குசொந்தமான UL-266 என்ற விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 44 பேரும், குவைட் விமானச்சேவைக்கு சொந்தமான ku-361 என்ற விமானத்தில் கட்டாருக்கு சென்ற சிலரும்
 வந்தடைந்தனர்.
அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் பொலனறுவை இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 9 டிசம்பர், 2015

காலி முகத்திடல் வீதியில் போக்குவரத்து நெரிசல்

முன்னிலை சோசலிசக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, புறக்கோட்டையிலிருந்து காலி முகத்திடரல் வரையிலான வீதியில், பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 7 டிசம்பர், 2015

தாயகத்தில் பாண் விலை அதிகரிக்கலாம் எச்சரிக்கை

வெதுப்பக உற்பத்திகளுக்கு வரி சலுகைகளை அரசாங்கம் வழங்காத பட்சத்தில் எதிர்வரும் மாதத்திலிருந்து பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதுப்பக உரிமையாளர்களின் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன எமது செய்திச் சேவைக்கு இந்த தகவலை வெளியிட்டார்.
இந்தமுறை வரவு செலவு திட்டத்தில் தேசத்தை கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெதுப்பக துறையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2 சதவீதமாக இருந்த இருந்த வரி தற்போது 4 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வெதுப்பக மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 4 டிசம்பர், 2015

சிறுவர்கள் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்கமறியல்!!!

டயகமை பொலிஸ் பிரிவுக்குட்ட பாடசாலையொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியரை, எதிர்வரும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று 
உத்தரவிட்டார்.
 மேற்படி ஆசிரியர், 13-14 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களை தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளார். இதுதொடர்பில், நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவு மேற்படி நபரை  
கைதுசெய்தது.
 குறித்த நபர், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு 
திரும்பியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 2 டிசம்பர், 2015

புற்றுநோய் கட்டியை கோல்கேட்டில் கலக்கப்படும் இரசாயனம் உண்டாக்குகிறது

உலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட். பெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், கடந்த
 வருடம் நச்சுயியல் 
ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக 
கூறப்பட்டுள்ளது. 
இது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும்
 இந்த இரசாயனம் 
குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை