செருப்புகள் வாங்கும்போது மிகவும் கவனமாக வாங்கவேண்டும், ஏனெனில் காலுக்கு மாறான செருப்புகளால் நிச்சயம் சில உடல்நலப்பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
காலின் பாதுகாப்புக்குத்தான் செருப்பு அணிகிறோம் என்ற நிலை மாறி, அழகுக்காக அணிகிறோம் என்ற நிலை வந்துவிட்டதால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில், அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும்.
அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.
வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மை உள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் எங்கு சென்றாலும் செருப்புடன் செல்வது நல்லது, ஏனெனில் உங்கள் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டால், அது குணமாவது கடினமாகும்.
செருப்புகளின் எடை அதிகமாக இருக்கக் கூடாது
அதிக நேரம் காத்திருக்க வேண்டிய இடத்துக்குப் போகும் போது அதிக உயரம் இல்லாத செருப்பை அணியவும்.
இதே போல இண்டர்வியூக்கு செல்லும் போது ஸ்ட்ராப் உள்ள செருப்புகளையே அணியவும்.
குளிர் காலத்தில் பாதத்தை ஒட்டிய படி இருக்கும் செருப்புகளையும், மழைக் காலத்தில் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணியவும். கோடைக் காலத்தில் காற்றோட்டமான செருப்பு அணியவும்.
வயதானவர்களுக்கு மென்மையான செருப்புகளை அணியுங்கள்.
மழைக் காலத்தில் செருப்பை வெளியில் உலர வைத்து பின்பு, பிளாஸ்டிக் சுவரில் அல்லது பிளாஸ்டிக் தாளில் மூடி ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும்.
வீடு மற்றும் வெளியே அணிந்து செல்லும் காலணிகளை தனித் தனியே வைக்கவும்.
ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா, கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா, ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதே சமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்த்து வாங்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக