siruppiddy

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சிறுவர்கள் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்கமறியல்!!!

டயகமை பொலிஸ் பிரிவுக்குட்ட பாடசாலையொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியரை, எதிர்வரும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று 
உத்தரவிட்டார்.
 மேற்படி ஆசிரியர், 13-14 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களை தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளார். இதுதொடர்பில், நுவரெலியா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவு மேற்படி நபரை  
கைதுசெய்தது.
 குறித்த நபர், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு 
திரும்பியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை