siruppiddy

வியாழன், 29 ஜனவரி, 2015

விவசாயிகளுக்கு தொடர்ந்தும் உர மானியம் வழங்கப்படும்.

பா உறுப்பினர்களுக்கான பரவலாக்கப்பட்ட நிதி 50 உயர்வு விவசாயிகளுக்கு தொடர்ந்தும் உர மானியம் வழங்கப்படும் என்றும் உலர்ந்த பால் ஒரு லீட்டர் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட நிதி 5 மில்லியனில் இருந்து 10 மில்லியன்வரை அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 ஜனவரி, 2015

வகுப்பிற்கு சென்ற இரு சிறுவர்களை காணவில்லை!

யாழில் தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
யாழ். குருநகர் கடற்கரை வீதிப்பகுதியைச் சேர்ந்த அன்ரன் அமலராஜ் (வயது 15) மற்றும் அதே இடத்தினைச் சேர்ந்த அமலதாஸ் துசாந்தன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் டேவிட் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு மாலை நேர வகுப்பிற்கு சென்றுள்ளனர். மாலை நேர வகுப்பு முடிந்தும் இரவு 10 மணி ஆகியும் வீட்டிற்கு இரு பிள்ளைகளும் வரவில்லை என பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், இரவு 10 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இருவரின் நிலமை தொடர்பில் இன்றுகாலை பல்வேறு முக்கிய இடங்களில் தேடிய போது, இருவரின் துவிச்சக்கர வண்டிகளும் யாழ். புகையிரத நிலையத்தில் பெற்றோரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இரு பிள்ளைகள் எங்கு சென்றிருப்பார்கள் என்பது தொடர்பில் பெற்றோர்கள் தேடி வருகின்றதுடன், 
இரு பிள்ளைகளிடமும் வகுப்பிற்கு சென்ற போது கையில் 1000 ரூபா பணம் இருந்துள்ளதாகவும் பெற்றோர்கள் கூறினார்கள். பிள்ளைகள் காணாமல் போன தொடர்பில் யாழ். பொலிஸார்தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 3 ஜனவரி, 2015

படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஓருவர் படுகாயமடைந்துள்ளார்.நாவாந்துறையில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்தவென கூறி படையினர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய சந்திரகுமார் சஞ்சீவன் என்பவரே காயமடைந்துள்ளார்.
வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு மோதல் சம்பவத்துடனும் இவர் தொடர்பு அற்றவரென கூறப்படுகின்றது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவரை 
வழிமறித்து படையினர் மீண்டும் தாக்கியதாகவும் அத்துடன் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றிருந்தவர்களையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை கைது செய்த படையினர் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று பின்னர் விடுவித்திருந்ததாக தெரியவருகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 1 ஜனவரி, 2015

மலரும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2015

 களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இணைய வாழ்த்துக்கள்
1.01.2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.
மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணி ஆனவுடன் , விஸ் யூ ஹேப்பி நியூ இயர் வாழ்த்துக்கள்
.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அணைவரையும் வாழ்தி நிற்கிறது  இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த
. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை