யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஓருவர் படுகாயமடைந்துள்ளார்.நாவாந்துறையில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்தவென கூறி படையினர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய சந்திரகுமார் சஞ்சீவன் என்பவரே காயமடைந்துள்ளார்.
வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு மோதல் சம்பவத்துடனும் இவர் தொடர்பு அற்றவரென கூறப்படுகின்றது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவரை
வழிமறித்து படையினர் மீண்டும் தாக்கியதாகவும் அத்துடன் அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றிருந்தவர்களையும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞனை கைது செய்த படையினர் மேலதிக விசாரணைக்கென அழைத்து சென்று பின்னர் விடுவித்திருந்ததாக தெரியவருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக