siruppiddy

வியாழன், 24 ஏப்ரல், 2014

மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21.04.14,

இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சாரதி
மலர்வு 29.04.1938    உதிர்வு2104.2014.
மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21.04.14 மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் ஓய்வு பெற்ற இ.போ.ச சாரதி யாழ்ப்பாணம்​. அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் கொண்ட தம்பிப்பிள்ளை பூபாலசுந்த​ரம் 21:04:2014 அன்று காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரி​ 27.04 .2014.ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில்
நடைபெற்று தோப்பு இந்து மாயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும்
ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்/
தோப்பு நவற்கிரிஉறவுகள்
மேலதிக தொடர்புகளுக்கு
இலங்கையில்.0094779006555.
சூட்டி லண்டன்.0044744521707.
மோகன் பிரான்ஸ்.0033666152043.
செந்தில்.பிரான்ஸ்.0033751012410.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

26 மீனவர்களுக்கு விளக்கமறியல்

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  26 மீனவர்களையும்  திருகோணமலை பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் சரீரப்பிணையில் திங்கட்கிழமை (14) மாலை விடுவித்துள்ளார்.
இம்மீனவர்கள் ஒவ்வொருவரையும்  50,000 ரூபா பெறுமதியான  சரீரப்பிணையில் விடுவித்த நீதவான், அடுத்த மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
திருகோணமலை துறைமுக பரப்பில்  நெய்மலைக்கு அருகில் 03 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  கிண்ணியாவைச் சேர்ந்த இம்மீனவர்கள் 26 பேரையும்  திங்கட்கிழமை (14) கடற்படையினர் கைதுசெய்தனர்.
இதன் பின்னர் இம்மீனவர்களை  துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இவர்களது படகுகள் கடற்படைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

மலேசிய விமானம்: புது தகவலை வெளியிட்ட ரஷ்யா

மாயமான மலேசிய விமானம் குறித்து ரஷ்யா புது தகவலை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் திகதி மாயமான மர்மமான முறையில் மாயமானது.
பல்வேறு தேடுதல் வேட்டைக்குப் பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்தவர்கள் இறந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து விமானம் கடலில் விழுந்த இடத்தை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இவ்விமானத்தை பயங்கரவாதிகள் பயணிகளுடன் கடத்தி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மறைவிடத்தில் வைத்திருப்பதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது
 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

வயிறுகளில் சுற்றி தங்கச் சங்கிலிகள் கடத்த முயற்சி..

இலங்கை தம்பதியரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கல்முனையைச் சேர்ந்த மேற்படி தம்பதியர், தங்களது 4 வயது மகன் மற்றும் 14 வயது குழந்தை ஆகியவற்றின் வயிறுகளில் தலா மும்மூன்று தங்கச் சங்கிலிகளை சுற்றி அவற்றை சென்னைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அத்துடன், அக்குழந்தைகளின் தாயான சந்தேகநபரும் தங்க வளையல்கள் பலவற்றை அணிந்துக்கொண்டு அவற்றை கடத்த முற்பட்டுள்ளார்.

இவர்களிடமிருந்து சுமார் 560 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்

அந்தியேட்டி அழைப்பிதழ்அமரர் திரு நடராசா அற்புதராசா

                          
 தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.07.04.2014.திங்கட்கிழமை அனைவரைவும் இதில்கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் தகவல் மனைவி பிள்ளைகள்.. அன்னாரின் ஆத்மாசாந்தி அடய இறைவனைப்பிராத்திப்போமாக ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!

நவற்கிரி காலநிலை