siruppiddy

வியாழன், 4 ஜூன், 2015

மேலும் 5 இந்திய மீனவர்கள் கச்சதீவுக்கருகில் கைது!

கச்சதீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கச்சதீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தம்மை பின்தொடர்ந்து வருமாறு இலங்கை கடற்படையினர் உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே அவர்கள் கடற்படையினருடன் சென்றதாக ராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினமும் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தவறினால், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தொழில் புறக்கணிப்பில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நேற்று ,11 மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.
 இதன்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசாங்கங்களை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை