siruppiddy

வெள்ளி, 27 மே, 2016

இ.போ.ச பேருந்து கடலில் பாய்ந்த 16 பேர் காயம்!

யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது.
மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்.வந்த அரச பேருந்தின் ரயர் வெடித்தில் வேககட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதி எல்லை கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்து விபத்து சம்ப 
வித்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மேற்படி மண்டைதீவு சந்தி பகுதியை அண்மித்ததும் பேருந்தின் முன் சக்கர ரயர் காற்றுப்போய் வெடித்துள்ளது.
இதன்காரணமாக ஏற்கனவே அதிவேகத்தில் பேருந்து பயணித்து கொண்டிருந்த நிலையில் ரயர் காற்று போனதன் காரணமாகவும் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் ஒரத்தில் இருந்த மதகொன்றுடன் மோதி,
சுமார் 50 மீற்றர் தூரம் பேருந்து துக்கியெறிப்பட்டு வீதியின் ஒரத்தில் இருந்த சதுப்பு நிலப் பகுதிக்குள் விழ்ந்து இவ் விபத்து 
ஏற்பட்டிருந்தது.
அத்துடன் பேருந்தின் பாகங்கள் பலவும் துக்கியேறியப்பட்டும் இருந்தன.
மேலும் பேருந்தில் 45 பயணிகள் வரை பயணித்திருந்ததாகவும் விபத்தில் காயமடைந்த அனைவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் ஊர்காவல்துறை பொலிஸார்
 தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருப்பதாவது,
குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக 16 பேர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் 11 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் விபத்தில் பேருந்து சாரதியே படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களது நிலைமை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தார்...மேலும் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>புதன், 25 மே, 2016

நாட்டில் 3 மாதங்களுக்கு மழை நீடிக்குமாம் ! – உணவு தட்டுப்பாடு அபாயம்!!!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம்
 எதிர்வு கூறியுள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை களமிறக்கியுள்ளது.
ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக கொழும்பில் நேற்று கொலன்னாவ, முல்லேரியா உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்றன. வீடுகளும் சுத்தமாக்கப்பட்டன. தொற்றுநோய்களைத் தடுப்பதற்குரிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சேதவிவரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் சுமார் 25 ஆயிரத்து 880 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 102 குளங்கள் முழுமையாகவும், 92 குளங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. ஆறுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றைப் புனரமைப்பதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், விவசாய உற்பத்திகளைத் துரிதமாக ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். இதற்காக விசேட செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அனர்த்தங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளையும்,
 உற்பத்திகளையும் 
எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி ஆராய்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும். விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படும். அந்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு விவசாயிகள் தமக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து முறையிட முடியும். விவசாய காப்புறுதித் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது” என்றும் 
அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில் இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென்மாகாணங்களில் இன்றைய தினமும் மழைபெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலீஹிம்
 தெரிவித்தார்.
“தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலையில்தான் இலங்கையில் கூடுதல் மழைபெய்யும். எனவே, மேற்படி மாகாணங்களுக்குப் புறம்பாக ஏனைய பகுதிகளிலும் இடையிடையே இடியுடன்கூடிய மழைபெய்யக்கூடும். சிலவேளை, மூன்று நாட்கள் சீரான காலநிலை நிலவி அதன் பின்னர் மழைபெய்யக்கூடும்” என்றும் அவர் 
சுட்டிக்காட்டினார்.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் 94 பேர் உயிரிழந்தனர். 21 ஆயிரத்து 600 கோடிக்கும் மேலாக இழப்புகள் 
ஏற்பட்டுள்ளன....
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>வியாழன், 12 மே, 2016

சூறாவளி தாக்கம் யாழில் பல பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின

யாழில் சூறாவளியுடன் கூடிய மழையினால் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், புனித கென்றியரசர் கல்லூரி, சென்யேம்ஸ் யாகப்பர் ஆலயம் போன்ற பகுதிகள் கடுமையாக 
பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று இளவாலையில் பெய்த கன மழையுடன் சூறாவளி தாக்கியதில் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>திங்கள், 9 மே, 2016

குழந்தைகள் கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் பயன்கள்?

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை 
கூறுங்கள் :
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் 
வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் 
வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி 
ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு 
ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் 
உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ….இறை சக்தி நம்மை காக்கட்டும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை