யாழ்.சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் வீட்டில் மாமியார் இல்லாத நேரம் பார்த்து ஏணி வைத்து ஏறிக் கூரை பிரித்துத் திருடிய மருமகளை எதிர்வரும் -30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று முன்தினம் 19 ஆம் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
19 வயதுடைய மருமகள் கடந்த ஆகஸ்ட்-16 ஆம் திகதி வீட்டின் கூரை பிரித்து உள்ளிறங்கி அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணம்,மடிக் கணணி மற்றும் கவரிங் நகைகள் ,சிம் அட்டை என்பவற்றைத் திருடியுள்ளார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்துத் திருட்டுப் போன சிம் அட்டையின் பாவனை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவ்வீட்டின் மருமகள் முறையிலான பெண்ணொருவரைக் கடந்த -18 ஆம் திகதி கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான் திருடியதைக் குறித்த பெண்மணி ஒப்புக் கொண்டுள்ளதுடன் திருடிய பொருட்களைத் தன் காதலனுக்குக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அவற்றைப் பறிமுதல் செய்த பொலிசார் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக