யுத்தம் எங்கள் குடிநீரையும் கொண்டு சென்றுவிட்டது என்றும், தாங்கள் தினம் குடிப்பதற்கே நீரின்றி கஷ்டப்படுவதாகவும் மன்னார் அலம்பிட்டி பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் அலபிட்டி கிராம மக்கள் தெரிவிக்கையில்,
ஜம்பது வருடங்களுக்கு மேலாக இக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம். கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கிராமத்தை விட்டு
வெளியேறி பின் மீண்டும மீள்குடியேறினோம்.
எங்களில் பல குடும்பங்கள் 1990ல் ஏற்பட்ட யுத்த அசாதாரண சுழ்நிலை காரணமாக வெளியேறி இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக வாழ்துவருகின்றனர்.
எனினும் மீள்குடியேறியுள்ள எங்களுக்கு அடிப்படை வசதிகளை சரியான முறையில் வழங்கவில்லை என கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குடிநீர் இல்லாத நிலையில் பொது மக்கள் பல்வேறு அசௌவுகரியங்களுக்கு முகம் கொடுத்து
வருகின்றோம்.
மன்னார் பிரதே சபை பவுசர் மூலம் நீரை வழங்கி வருவதாக கூறப்பட்டாலும் நீர் பற்றாக்குறை நிலவுகின்றது. இதேவேளை இங்கு கிணறு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது எனினும் அக்கிணற்றில் நீர் வற்றிய நிலையிலேயே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிடு
கின்றனர்.
தற்போது இக்கிராமத்தில் 11 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு சிறிய கிராமம் என்பதால் அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என கவலை
அடைந்துள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், அதிகாரிகளின் அசமந்த போக்கால் எதுவும் பலனளிக்கவில்லை என தெரிவிக்கின்றர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக