siruppiddy

வெள்ளி, 22 நவம்பர், 2013

ஆமை ஒன்றைக் கடத்திய நால்வருக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம்


 கொடிகாமத்திலிருந்து புன்னாலைக்கட்டுவனுக்கு ஆமை ஒன்றைக் கடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடிகாமத்திலிருந்து ஆமை ஒன்றுடன் சென்ற புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த நால்வரை சாவகச்சேரி பொலிஸார் கனகன்புளியடிச் சந்தியில் நடத்திய சோதனையின்போது கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சந்தேக நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். குறித்த ஆமையை ஆற்றில் விடுமாறும் உத்தரவிட்டார் - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3061#sthash.XEmSBzPQ.dpuf

செவ்வாய், 19 நவம்பர், 2013

உலக சாதனை படைக்க விரும்பும்{காணொளி, }


பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

மகனை பார்க்கச் சென்ற தந்தை பஸ்சில் மரணம்


பொகவந்தலாவையில் இருந்து அட்டன் நோக்கி இன்று காலை சென்ற பஸ்சில் பயணித்தவர் ஒருவர் பஸ்சிலேய மரணித்துள்ளார்.

பொகவந்தாலவை இராணிகாடு தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய வீரன் அங்கமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி கல்வி பயிலும் தனது மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை கொண்டு செல்லும் வழியிலேயே இவர் மரணித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவரின் சடலம் தற்போது பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்;கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வியாழன், 7 நவம்பர், 2013

சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்:


 
சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்: 
இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன்(வயது 30).
இவரது மகள் லெக்சி ஹட்சன்(வயது 4), மிகப் பெரிய நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவளது கையில் சொக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள்.

இந்நிலையில் அவளது கையில் இருந்த சொக்லேட்டை பறிக்க நாய் பாய்ந்தது.
இதனை அறியாத லெக்சி, நாயோடு சண்டையிடவே கோபத்தில் பயங்கரமாக குரைத்தபடி பாய்ந்து கடித்து குதறியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், பார்த்து அலறி கூச்சல் போட்டனர்.
விரைந்து வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார்.

உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்
 

செவ்வாய், 5 நவம்பர், 2013

ஞான கதை -பிரார்த்தனையின் பலன்


ஒரு ஞானி ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து,தன குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் ஞானி வந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ஞானியும் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஞானியிடம் கேட்டான்,'மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா?'ஞானி அவனிடம்,''உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு முட்டாள்.'' என்றார்.அவன் அந்த ஊரில் ஒரு பெரியஆள்.எல்லோருக்கும் முன்னால் ஞானி முட்டாள் என்று சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே ஞானியை அடிக்கப் போனான்.ஞானி பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,''அப்பா,நான் சொன்ன சொல் உனக்குக் கோபத்தைவரவழைக்க முடியும் என்றால்,ஏன் என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் கூடாது?''என்று கேட்டார்.அவன் முகத்தைத் தொங்க விட்டவாறு வெளியேறினான்,


கவிதை



 நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
 வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே.. —
 

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கட்டுப்பாட்டு விலைஆங்கில மருந்து வகைகளுக்கு

                           
 
ஆங்கில மருந்து வகைகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருந்து வகைகளை நிர்ணயிக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்க ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்றை அமைக்கும் படி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இரசாயன சேவைகள் பிரதிப்பணிப்பாளர், சுகாதார வழங்கல் பிரிவின் இயக்குநர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

நவற்கிரி காலநிலை