நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.
எனினும் மொத்தமாக நாடு தழுவிய ரீதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் 22,500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
விசேடமாக கிராமிய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிளம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக போதுமான ஆசிரியர்கள் மற்றும் வளங்கள் இல்லை.
இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரச பட்டதாரிகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களை ஆசிரியர் தொழிலுக்கு
சேர்த்துக் கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமை கொண்ட உயர் தரம் சித்தி பெற்ற இளைஞர் – யுவதிகளை
உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுகின்ற விஞ்ஞான மற்றும் கலை பட்டமொன்றை பூர்த்தி செய்தவுடன் ஆசிரியர்
சேவைக்கு
இணைத்துக் கொள்வதற்கும், அதற்காக அரச வங்கி ஒன்றிலிருந்து 275,000 ரூபா கடன் தொகையொன்றை அவ்விளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கும், பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு தகைமை பெற்ற இளைஞர் யுவதிகள் பட்டப்பிடிப்பினை நிறைவு பெற்ற பின் 10 வருட காலத்துக்காக தம்மால் தெரிவு செய்யப்படும் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் குறைப்பாடுகளை கொண்ட பாடசாலைகளுக்கு ஆசிரியராக பணிபுரிவதற்கு முடியுமான வகையில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பிரதேசத்தில் ஆசிரியராக 10 வருடங்கள் பணிபுரிந்தால் பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் தொகை மீண்டும் அறவிடப்பட மாட்டாது. அதனடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக முதற் கட்டமாக இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகள் 5000 பேரை விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களாக இணைத்துக்
கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரச பாடசாலைகளில் தற்போது காணப்படும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி பட்டதாரிகளை விரைவில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும்
தீர்மானிக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக