siruppiddy

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஒருவராத்தில் 5 65000 ரூபா பெறுமதியான காசோலை மோசடிகள்!


 யாழ்ப்பாணத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காவல்துறை அதிகாரி எம். முகம்மது ஜிப்ரி தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த வாரத்தில் யாழ். நகரைச் சேர்ந்த ஒருவர் அதே இடத்தைச் சேர்ந்த இன்னொரு வர்த்தகருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை ஒன்றினைக் கொடுத்துள்ளார். அக்காசோலை செல்லுபடியற்றதினால் காசோலையைப் பெற்ற குறித்த நபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப் பாட்டினைத் தொடர்ந்து காவல்துறை குறித்த சந்தேக நபர் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டபோது சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளார் இதனால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு நபர் கொக்குவில் விதானை வீதியைச் சேர்ந்த நபரிடம் 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையைக் கொடுத்து மோசடி செய்தமை தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த சந்தேக நபர் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போது சந்தேக நபர் தலைமறைவாகியமையால் கைது செய்யமுடியவில்லை.
இது தொடர்பான விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரையும் விரைவில் கைது செய்வோம் என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை