siruppiddy

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பரீட்சைக்கு கண்விழித்து கற்பதற்கென தாயை ஏமாற்றி!



க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வருகின்ற பாடசாலை மாணவன் ஒருவர் இரவில் கண் விழித்துக் கற்பதற்காக குளிர்பானம் என தாயரை ஏமாற்றி பணம் வாங்கி பியர் வாங்கி குடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சுழிபுரம் பகுதியிலுள்ள பாடசாலை மாணவன் ஒருவரே ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரவில் கண் விழித்து கற்க வேண்டும் என தாயாரிடம் மாணவன் குளிர் பானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
இதனை கேட்ட தாயார் தினமும் பணம் கொடுத்துள்ளார். இதனைக் கொண்டு மாணவன் தினமும் ரின்னில் அடைக்கப்பட்ட பியரை வாங்கி குடித்துள்ளார்.
நிறைய ரின்கள் வீட்டில் சேர்ந்து விட அவற்றை வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்யக் கொண்டு சென்றபோது இவ்வளவு பியரை யார்? குடித்தது என வியாபாரி வினவியபோதே விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகனின் இந்தச் செயலால் தாயார் அதிர்ச்சியடைந்தள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை