siruppiddy

புதன், 11 மார்ச், 2015

பெண் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி மரணம்!!!

<
 யாழ்.வடமராட்சி பொலிகண்டியை சேர்ந்த  பெண் ஒருவர்   தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாஉயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டார்.
தான் வெளியில் சென்று வீடு திரும்பியபோது கதவு பூட்டியிருந்ததாகவும், மனைவி தீயில் எரிந்துகொண்டிருந்ததாகவும் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்து வைத்தியசாலையில் 
மனைவியை அனுமதித்ததாக கணவன்
 தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கூறினர். பெண்ணின் கணவரின் கைகளிலும் எரிகாயங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை