வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். அதேயிடத்தைச் சேர்ந்த யோகன் கஜி (வயது 04) என்ற சிறுவனே வலது கையின் நான்கு விரல்களும் சிதைவடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வயல் நிலத்திலிருந்த பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த வெங்காய வெடியை வீட்டுக்கு எடுத்து வந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்துள்ளான். வேட்டைக்கு பய்னபடும் வெங்காய வெடி தடை செய்யப்பட்ட வெடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக