siruppiddy

புதன், 25 மார்ச், 2015

விருந்தினர்களுக்கு பனையோலை மாலை அணிவிப்பு

வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன.

வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு, வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது.

ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பது வழமையானது.

ஆனால், நேற்றய நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை