siruppiddy

வெள்ளி, 8 ஜனவரி, 2016

காணாமல் போன விமானம் பயணிகள் அனைவரும் உயிருடன் சிறையில்

மலேசிய விமானம் 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போய் 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்களை உயிருடன் சிறை பிடித்து வைத்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.
மலேசிய நாட்டை சேர்ந்த MH370 என்ற விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீய்ஜிங் நகருக்கு புறப்பட்டுள்ளது.
ஆனால், விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ரேடார் கருவியில் இருந்து விலகிய அந்த விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கி இருக்கலாம் என பல யூகங்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், கடந்த யூலை மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் இறக்கையானது காணாமல் போன மலேசிய விமானத்தின் இறக்கை தான் என பிரான்ஸ் விசாரணை அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத சீனாவை சேர்ந்த 154 பயணிகளின் உறவினர்கள் தற்போது பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘மலேசிய விமானத்தில் பயணத்த தங்களுடைய உறவினர்கள் சாகவில்லை. அவர்களை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் சிறை வைத்துள்ளனர்.
தங்களுடைய உறவினர்களை எதற்காக சிறை பிடித்துள்ளனர் என தெரியாது. ஆனால், அவர்களை உடனடியாக விடுதலை செய்தால் கடத்தல்காரர்களை மன்னிக்க தயார்.
அண்மையில் பிரான்ஸ் அதிகாரிகள்கண்டுபிடித்த இறக்கை மலேசிய விமானத்தின் இறக்கை தான் என்பதை எங்களால் ஏற்க முடியாது. இதில் ஒரு மிகப்பெரிய மர்மம் இருப்பதாக’ உறவினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மலேசிய விமானம் காணாமல் போய் கிட்டதட்ட 2 வருடங்கள் ஆன பிறகு, பயணிகளின் உறவினர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை