மாற்றுத்திறனாளிகளுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் பிரபல தென்ஆப்ரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். ஊனமான தனது கால்களில் பிளேடுகளை பொருத்திக் கொண்டு அவர் ஓடுவதை பார்த்தாலே தன்னம்பிக்கை அதிகரித்து விடும்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதாரண வீரர்களுடன் இணைந்து 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க பிஸ்டோரியசும் தகுதி பெற்றார். உலகிலேயே இத்தகைய பெருமையை பெற்ற ஒரே மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்தான்.
தற்போது இந்தியாவில் இருந்தும்
ஆஸ்கர் பிஸ்டோரியஸ் போலவே மற்றொரு வீரர் புறப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த ஆனந்த், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி, ஆனந்த் தனது கால்களை இழந்தார். அதற்கு பின் ராணுவத்தில் இருந்து விலகிய ஆனந்த், ஆஸ்கர் பிஸ்டோரியஸ் போல விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டுமென ஆர்வம் கொண்டுள்ளார்.
இதற்காக தற்போது பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்காக உலகத் தடகளத்தில் பங்கேற்று சாதிக்க வேண்டுமென்பதே தற்போது ஆனந்தின் ஒரே லட்சியம். கால்களை இழந்தாலும் மனோதிடத்தை இழக்காத ஆனந்தின் லட்சியம் வெற்றி பெற வாழ்த்துவோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக