டைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக
நடித்தார்.
இவருக்கும், இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நதியா, ‘பி.ஏ.’ (அக்கவுன்டன்சி) பட்டதாரி. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆரி-நதியா இருவரும் திருமணம் செய்து கொள்ள
விரும்பினார்கள்.
இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு
நடக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. அதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நிருபரிடம் நடிகர் ஆரி
கூறியதாவது:-
‘‘நானும், நதியாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் எங்கள் நட்பு உருவானது. கடந்த மூன்று வருடங்களாக நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். சமீபத்தில்தான் அது காதலாக மாறியது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். எங்கள் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்
கொண்டார்கள்.
எனவே இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்’’. இவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக