siruppiddy

புதன், 25 மார்ச், 2015

நாய்களுக்கு நீர் வெறுப்பு தடுப்பூசி போடும் பணிகள்

யாழ் நாய்களுக்கு தடுப்பூசி ஏழாலையில் மும்முரம்  கடந்த வாரம் நாயினால் விராண்டப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நான்கு மாத கால இடைவெளியின் பின்னர் நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டுள்ளது என உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
மகிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நாய்கள் கொல்லப்படுவது தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் கட்டாக் காலி நாய்களின் தொல்லையும் வீதிக்கு வீதி அதிகரித்துக் காணப்படுகின்றது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 மார்ச், 2015

ஜீ-சி-ஈ-சாதரண-தரப்பரீட்சைப் பெறுபேறுகள் ஏபரல் முதலவாரத்தில்

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 11 மார்ச், 2015

பெண் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி மரணம்!!!

<
 யாழ்.வடமராட்சி பொலிகண்டியை சேர்ந்த  பெண் ஒருவர்   தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாஉயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டார்.
தான் வெளியில் சென்று வீடு திரும்பியபோது கதவு பூட்டியிருந்ததாகவும், மனைவி தீயில் எரிந்துகொண்டிருந்ததாகவும் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்து வைத்தியசாலையில் 
மனைவியை அனுமதித்ததாக கணவன்
 தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் கூறினர். பெண்ணின் கணவரின் கைகளிலும் எரிகாயங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 8 மார்ச், 2015

பெண்­மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் ´தாக்­குதல்


யாழ்ப்­பாணம் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வைத்து பெண்­ணொ­ருவர் மூர்க்­கத்­த­ன­மான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது.
இந்தச் சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தாவது,
கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் பிணக்கு ஒன்­றி­னை­ய­டத்து குறித்த பெண் மீது மற்­றொ­ருவர் முறைப்­பாடு செய­துள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த பெண்ணை நேற்று முற்­பகல் 11 மணிக்கு விசா­ர­ணைக்­கு­வ­ரு­மாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த விசா­ர­ணைக்­கான கடி­தமும் முறைப்­பாடு செய்­த­வ­ரி­டமே பொலி­ஸா­ரினால் கொடுக்­கப்­பட்டு சம்­பந்­தப்ட்ட பெண்ணிடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இறு­தி­நே­ரத்­தில கிடைத்த அழைப்­பை­ய­டுத்து குறித்த பெண் நேற்று நண்­பகல் 12 மணி­ய­ளவில் பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்­றுள்ளார்.
உரிய நேரத்­துக்கு விசா­ர­ணைக்­காக வரு­கை­த­ராமை தொடர்பில் குறித்த பிணக்கை விசா­ரிக்கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பெண்ணை ஏசி­யுள்ளார்.
விசா­ர­ணைக்கு பொலிஸார் உரிய முறையில் அழைப்பு விடுத்­தி­ருக்க வேண்டும். முறைப்­பாடு செய்­த­வ­ரி­டமே அழைப்புக்கான கடிதம் வழங்­கப்­பட்­டமை தவ­றா­னது.
அத்­துடன் இறு­தி­நே­ரத்­தி­லேயே இந்த அழைப்பு எனக்கு கிடைத்­தி­ருந்­தது. இத­னால்தான் வருகை தரு­வ­தற்கு கால­தா­மதம் சென்­றது என்று இந்தப் பெண்ணும் வாதிட்­டுள்ளார்.
இத­னை­ய­டுத்து ஆத்­தி­ர­ம­டைந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கதி­ரை­யி­லி­ருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்­குதல் நடத்­தி­யுள்ளார்.
இத­னைத்­தொ­டர்ந்து ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலரும் பெண்ணின் தலை­ம­யிரைப் பிடித்­தி­ழுத்து கொடூ­ர­மாக தாக்­கி­யுள்­ளனர். கத­றக்­க­தற தாக்­குதல் நடத்­திய பொலிஸார் பெண்ணை சிறைக்­கூண்­டுக்குள் அடைத்­துள்­ளனர்.
இந்தச் சம்­ப­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் நின்ற பொது­மக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்­துள்­ளனர். குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 பிப்ரவரி, 2015

அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
திதி : நாள்.25 பெப்ரவரி 2015
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  நடராஜா அற்புதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.02.2015. 
ஏழு ஏழு ஜென்மங்கள் ஆனால் என்ன 
எம் உள்ளம் உங்களையே நினைத்தே நிற்கும் 
கண் முன்னே நிற்பது போல் இனிய தோற்றம் 
காணாது தவிக்கின்றோம் எங்கள் அப்பா...  
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் 
சென்றது ஏன்? கலங்குகின்றோம் 
எண்ணவில்லை நடந்தவைகள் நிஜம் தானா என்று 
நினைக்கும் முன்னே மறைந்து விட்டீர் 
தங்களைத் தான் கனவுதனில் காண நேர்ந்திடில் 
நிஜம் தானதிலே வந்தது போல் நினைவு கொள்கின்றோம் 
என்றும் மறவாத நினைவோடு நாம்..அப்பா...  
உங்கள் பிரிவால் வாடும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
மச்சான்மார்  மச்சாள் மார் ,அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமார் 
மைத்துனன்குடும்பத்தினர். .மைத்துனிகுடும்பத்தினர். சித்தப்பா சித்திமார் குடும்பத்தினர்  பெறாமக்கள் குடும்பத்தினருடன் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி  



புதன், 11 பிப்ரவரி, 2015

அறிவுறித்தல் ``பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ???

பேஸ்புக்பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.
அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார்.
எனவே, அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் குறிப்பிட்டார்.
அவ்வாறான இணைப்புக்கள் உங்களது பேஸ்புக் பக்கத்தில் காணப்படின், அதனைப் பார்வையிடாது, பேஸ்புக் நிறுவனத்திற்கு அறியத்தரும் பட்சத்தில், அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 பிப்ரவரி, 2015

ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோ தியதில் 4வர் பலி!!

இராகமை பிரதான புகையிரத பாதை, பட்டுவத்தை கடவையில் ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக
 ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து வவுனியாவை நோக்கி சென்ற ரயிலிலேயே இந்த ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 
படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நவற்கிரி காலநிலை