இராகமை பிரதான புகையிரத பாதை, பட்டுவத்தை கடவையில் ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக
ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து வவுனியாவை நோக்கி சென்ற ரயிலிலேயே இந்த ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் இராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக