siruppiddy

புதன், 11 பிப்ரவரி, 2015

அறிவுறித்தல் ``பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ???

பேஸ்புக்பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.
அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார்.
எனவே, அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் குறிப்பிட்டார்.
அவ்வாறான இணைப்புக்கள் உங்களது பேஸ்புக் பக்கத்தில் காணப்படின், அதனைப் பார்வையிடாது, பேஸ்புக் நிறுவனத்திற்கு அறியத்தரும் பட்சத்தில், அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை