siruppiddy

சனி, 5 செப்டம்பர், 2015

கொள்ளைக் கும்பல் அட்டகாசம் உதவிக்கு ஓடியவருக்கு வாள்வெட்டு

வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35 பவுண் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் அபாயக்குரல் எழுப்பவே, அங்கிருந்த நபர் தனது சகோதரியின் வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கு நின்ற 
கொள்ளையர்கள் ஓடிச்சென்றவர் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக
 விசாரணைகளை சுன்னாகம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தொழிலுக்கு சென்று வந்த இளைஞனை, இணுவில் துரை வீதியில் இடைமறித்த இளைஞர்கள் சிலர், நேற்று வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உடுவில் கிழக்கு செட்டி வீதியினை சேர்ந்த விஜயரஞ்சன் சுரேஸ் (வயது 24) என்பவரே கழுத்தில் 
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை