கொட்டதெனியாவ, படல்கம பகுதியில் சிறு பிள்ளையொன்று காணாமற்போயுள்ளது.
கொட்டதெனியாவ, படல்கம பகுதியைச் சேர்ந்த 4 வயதான பெண் பிள்ளையொன்றே காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
இந்த பெண்பிள்ளை தனது பெற்றோருடன் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோதே காணாமற்போயுள்ளது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவிக்கின்றார்.
சிறுமி காணாமற்போனமை தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்திற்கு இன்று (12) காலை 7 மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாகவும் பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதுதவிர காணாமற்போன பிள்ளையை தேடி பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக