கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் கொலை தொடர்பில் பௌதீக தடயங்கள் உள்ளிட்ட விசேட சாட்சியங்களும் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொட்டதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட சிறுமியினது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொட்டதெனியாவ படல்கம அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி நேற்று முன்தினம் அதிகாலை காணாமற்போயிருந்தார்.
சிறுமியின் சடலம் வீட்டுக்கு அருகேயுள்ள ஓடையொன்றின் கரையிலிருந்து நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் மற்றும் சமூகத்தினர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக