தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது.
அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார்.
இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது.
இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு இந்த அதீத வளர்ச்சியின் காரணம் புலப்படவில்லை.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தலைமுடியை அலசும்போது எதிர்பாராத விதமாக கொம்பில் இடித்துக் கொண்டதில், அது அசுர வேகத்தில் மீண்டும் வளரத் தொடங்கியது.
வெறும் 6 மாதங்களில் அது சுமார் 5 அங்குல உயரத்துக்கும், 2 அங்குல அகலத்துக்கும் வளர்ந்துள்ளது.
இந்தக் கொம்பு நமது உடலின் நகம், முடி வளர்வதற்கான முக்கிய புரோட்டினாக விளங்கும் கேரட்டீனால் ஆனது. நம் உடலின் மீது அதிகமாக சூரிய ஒளி படும் பாகங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்படலாம்.
இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலானோருக்கு இவ்வகை புற்றுநோய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக