திமன்றத்துக்கு சவால்விடும் சுன்னாகம் ரவுடிக் கும்பல்களை அடக்க உடனடியாக விசேட அதிரடிப்படையை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
ரவுடித்தனத்தில் ஈடுபடும் அனை வரையும் பொலிஸ் விசேட அதிரப்படை யைப் பாவித்து கைது செய்து நீதிமன் றில் ஆஜராக்குமாறு வட பிராந்திய சிரே ஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றங்கள் கடுமையாக உத் தரவுகள் பிறப்பிக்கின்ற நிலையில் நீதி மன்ற உத்தரவுகளுக்கு சவால்விடும் வகையில் சுன்னாகத்தில் இயங்கும் அனைத்து ரவுடிகளும் கைது செய்யப் பட வேண்டும். அவர்களுக்கு பாதுகா ப்பு அடைக்கலம் கொடுக்கும் அனைத் துப் பெற்றோர்கள், உறவினர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
குறிக்கப்பட்ட ரவுடித்தனம் பண்ணி வீதியில் வாள்வெட்டுக்களை பகிரங்க மாக நடத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் இந்த ரவுடிக்கும்பல்கள் சட்ட ஆட்சிக்கு விரோதமானவர்கள், நீதிமன்ற ஆட்சிக்கு ஆபத்தானவர்கள், ஜனநாயக ஆட்சிக்கு இடையூறு விளை விப்பவர்கள், இவர்கள் அனைவரும் இருக்கவேண்டிய இடம் சிறைச்சாலை.
குற்றம் செய்துவிட்டு சுதந்திரமாக நட மாட எந்தவொரு ரவுடிக் கும்பலையும் அனுமதிக்கக் கூடாது. ரவுடிக் கும்பலு க்கு உணவுகள், அடைக்கலம் கொடுப்ப வர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். நீதிமன்றுக்கு சவால்விடும் எந்த ரவுடி மகனும் யாழ்ப்பாணம் மாவ ட்டத்தில் இருக்க அனுமதிக்க முடியாது. நீதித்துறையுடன் மோதுகின்ற எந்த ரவு டிக் கும்பலுக்கும் மன்னிப்பு கிடையாது.
நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்குத் தலைவணங்காது சட்டத்தைக் கையி லெடுக்கும் இத்தகைய ரவுடிக் கும்பல் கள் ஒரு நிமிடம் கூட சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்கக் கூடாது.
எனவே அனைத்து ரவுடிக் கும்பல்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்கு மாறு வட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு மன்று உத்தரவு பிறப்பிக் கின்றது.
சுன்னாகம் பொலிஸ் பொறுப் பதிகாரி உட்பட குற்றவியல் வழக்குக ளில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுப வர்கள் மிகவும் பலவீனமானவர்களாக உள்ளார்கள்.
அவர்களிடம் திறமை காணப்பட வில்லை. திறமையற்ற பொலிஸ் உத்தி யோகத்தர்கள் பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதாக மன்று கருத்துகின்றது. எனவே அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடு த்து சுன்னாகம் பொலிஸ் பகுதி உடன டியாக சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திறமையற்ற உத்தியோகத்தர்களை பொலிஸ் மா அதிபரின் அனுசரணை யுடன் வேறு இடங்களுக்கு மாற்றி திறமையான பொலிஸ் அதிகாரிகளை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நியமிக்கும் படியும் குறிக்கப்பட்ட சிரே ஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு மன்று பணிப்புரை பிறப்பிக்கின்றது என அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக