siruppiddy

வியாழன், 7 நவம்பர், 2013

சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்:


 
சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்: 
இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன்(வயது 30).
இவரது மகள் லெக்சி ஹட்சன்(வயது 4), மிகப் பெரிய நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவளது கையில் சொக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள்.

இந்நிலையில் அவளது கையில் இருந்த சொக்லேட்டை பறிக்க நாய் பாய்ந்தது.
இதனை அறியாத லெக்சி, நாயோடு சண்டையிடவே கோபத்தில் பயங்கரமாக குரைத்தபடி பாய்ந்து கடித்து குதறியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், பார்த்து அலறி கூச்சல் போட்டனர்.
விரைந்து வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார்.

உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்
 

செவ்வாய், 5 நவம்பர், 2013

ஞான கதை -பிரார்த்தனையின் பலன்


ஒரு ஞானி ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து,தன குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் ஞானி வந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ஞானியும் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஞானியிடம் கேட்டான்,'மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா?'ஞானி அவனிடம்,''உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு முட்டாள்.'' என்றார்.அவன் அந்த ஊரில் ஒரு பெரியஆள்.எல்லோருக்கும் முன்னால் ஞானி முட்டாள் என்று சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே ஞானியை அடிக்கப் போனான்.ஞானி பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,''அப்பா,நான் சொன்ன சொல் உனக்குக் கோபத்தைவரவழைக்க முடியும் என்றால்,ஏன் என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் கூடாது?''என்று கேட்டார்.அவன் முகத்தைத் தொங்க விட்டவாறு வெளியேறினான்,


கவிதை



 நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
 வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே.. —
 

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கட்டுப்பாட்டு விலைஆங்கில மருந்து வகைகளுக்கு

                           
 
ஆங்கில மருந்து வகைகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருந்து வகைகளை நிர்ணயிக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்க ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்றை அமைக்கும் படி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இரசாயன சேவைகள் பிரதிப்பணிப்பாளர், சுகாதார வழங்கல் பிரிவின் இயக்குநர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! உயிருடன் புதைத்தனர்

 
 
பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரை அடுத்த தோபா தெக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக்மொகல்.

நேற்று பள்ளிக்கு சென்ற இவரது 13 வயது மகள், வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே சிறுமியை இரண்டு கடத்தி சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்நிலையில் அங்குள்ள சாலையோரம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக விரைந்து வந்த பொலிசார், சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதில், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கொலைக் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரபல நகைக் கொள்ளையன் கைது


சுவிஸ்ஸில் பல காலமாக நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க காவல் துறை அதிகாரிகள் முயன்றபோது அதில் ஒருவர் பிடிபட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயதை எட்டிய இவர் கொள்ளையடிப்பவர்களுக்கு சிக்னல் தருவதற்காக பியு-ரிவாஜ் ஹோட்டல் வாயிலில் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2011ம் ஆண்டு மார்ச்சில் ஷ்காப்ஹுசென் இடத்திலும் உதவியிருக்கிறார்.
ஒரு அறையில் இருந்த 150 வாட்சுகள் மற்றும் 66 நகைகள் என திட்டத்திட்ட 1.8 மில்லியன் பிராங்க் மதிப்புள்ள பொருட்களை ஷ்காப்ஹுசென் ஷாப்பில் இருந்து மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை அந்த பொருட்கள் பொலிசாரல் மீட்கப்படவில்லை.
அதேபோல் 500 பிராங்க் மதிப்புள்ள நகைகளை வாவிட்டில்(Vaud) உள்ள ஹோட்டலில் திருடப்பட்டது. அதுவும் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.
கடந்த வருடம் இந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து நபர்களில் இருந்து ஒருவர் மட்டும் மொண்டேநேக்ரோவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சுவிஸ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
இந்த குற்றங்களுக்காக இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கக் கோரி சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 

வியாழன், 24 அக்டோபர், 2013

பாடசாலைகளில் விசேட தேவையுடைய கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு


விசேட தேவையுடைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பத்து வீத சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் இயங்கும் கிழக்கிலங்கை ஸாஹிரா விசேட பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி மற்றும் விற்பனையை இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேட தேவையுடைய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் இறைவனுக்காக செய்யும் பணி என்பதை மறந்து விடக் கூடாது.
இந்தப் பணி பொறுமையுடன் தவமிருந்து செய்யும் பணி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கையில் விசேட தேவையுடையோர்கள் சாதாரண கல்வி நடைமுறைக்கு உள்வாங்கப்படுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்ற இந்த சூழ்நிலையில் இவ்வாறான பாடசாலைகள் நடத்தப்படுவது அதிகம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலகில் விசேட தேவையுடையோர் ஒன்றும் இயலாதவர்கள், குறையுள்ளவர்கள் என ஒதுக்கப்படக் கூடாது.

விசேட தேவையுடையோரும் சமூகத்தில் சாதாரண மக்களுடன் இணைந்து வாழ வேண்டும். ஏனெனில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் தாம் விரும்பியவற்றை செய்வதற்கான உரிமையும் சுதந்திரமும் உள்ளது.
அதற்கமைவாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் உரிமைகளும் சுதந்திரமும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை விசேட கவனம் செலுத்தி விரைவில் செய்து தருவேன்.

ஆகவே விசேட தேவையுடையோரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதாமல் அவர்களுடைய நலன்கருதி சமூகத்தில் ஓர் அங்கமாக இணைத்து நாம் எல்லோரும் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இரசாயன வாயு கசிவு: 70 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்


பிலியந்தலை பகுதியில் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியான இரசாயன வாயுவின் காரணமாக தொழிற்சாலைக்கு அருகில் வசித்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் களுபோவில பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பிலியந்தலை பொலிஸார் விசாரணைகள் நிறைபெறும் வரையில் குறித்த தொழிற்சாலை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நவற்கிரி காலநிலை