siruppiddy

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஆசிரியர் கைதினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!


 
 வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். தினம் கொண்டாடப்பட்டபோது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம்மாணவர்களை தண்டித்த போது ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனால் மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

இந்நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும் பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன், 9 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளை வசியம் செய்த இளம்பெண்


தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை வசியம் செய்த இளம் பெண் ஒருவரால் பேராபத்து நேர்ந்துள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலா தலமான பட்டாயா பகுதிக்கு, கார்த்திகேயன் கிருஷ்ணன்(வயது 36) மற்றும் காதர் பாட்சா(வயது 40) ஆகியோர் சென்றனர்.
அப்போது தாய்லாந்து பெண் ஒருவர் அவர்களை அணுகி பணம் கொடுத்தால் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு விலையை நிர்ணயித்த பிறகு கார்த்திகேயன், பாஷா ஆகியோரை அப்பெண் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அதற்குள் ஏறுமாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் காரில் ஏறியவுடன் அவர்களை சற்றுநேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு அப்பெண் தனது நண்பரை அழைத்துள்ளார்.
அப்போது தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்கள் வந்து கார்த்திகேயன் மற்றும் பாஷாவை மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்களிடமிருந்து தப்பி வந்த கிருஷ்ணன், பாஷாவை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் பெண் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

உலக சாதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்?


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தொன்றின் போது உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஒரு குழந்தையின் தந்தை ஒருவரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு வைத்தியர்களும் ஏனைய வைத்தியர்களும் கூட்டாக இணைந்து துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை மீளப் பொருத்தியுள்ளனர்.

12 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பு ஒன்றை மீளவும் பொருத்தி வழமை நிலைமைக்கு கொண்டு வந்த முதல் சந்தர்ப்பமாக இது கருதப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளியை வைத்தியசாலையில் சேர்த்த நேரம், துண்டிக்கப்பட்ட உறுப்பை பாதுகாப்பாக எடுத்து வந்த விதம் ஆகியன இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவியது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்,

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபர் இயல்பு வாழக்கையை தொடர முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முற்று முழுதாக துண்டிக்கப்பட்டிருந்த ஆணுறுப்பு வெற்றிகரமாக மீளப் பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுநீர் கழித்தல், தம்பத்ய உறவை தொடருதல் போன்ற சகல செயற்பாடுகளையும் தடையின்றி மேற்கொள்ளக் கூடிய வகையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்,

திங்கள், 7 அக்டோபர், 2013

கரைவலையி ல்மட்டக்களப்பில் 35 ஆயிரம் கிலோ பாரை மீன்கள்!


மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியின் போது பெருமளவு பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இன்று காலை கரைவலைத் தொழில் ஈடுபட்டிருந்த போது சுமார் 35,000 கிலோ கிராம் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை பார்வையிட அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் கூடி நின்றனர்.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் டெங்கு ஒழிப்பு


டெங்கு ஒழிப்பு வார‌த்தை முன்னிட்டு யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் கோப்பாய் இலங்கை வங்கி ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7.00 மணியில் இருந்து 11.00 மணி வரை வங்கி முகாமையாளர் எஸ்.தவலிங்கம் தலைமையில் டெங்கு சிரமதானம் பணி நடைபெற்றது.
 

சனி, 5 அக்டோபர், 2013

அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிள்விபத்து


மோட்டார் சைக்கிளினை டிப்பர் வாகனம் மோதியதில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சாவகச்சேரி, கொரடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த யோ.கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.இவர் யாழ். பல்கலைக்கழகத்தின்

கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறை இறுதியாண்டு மாணவனாவார். குறித்த மாணவன் புத்தூரிலிருந்து கெருடாவில் நோக்கி மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பின் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்து. இதனையடுத்து பலத்த காயங்களுக்குள்ளான

மாணவனை அச்சுவேலி வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசலையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சைபயனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. -

புதன், 2 அக்டோபர், 2013

அறிமுகமாகின்றது அன்ரோயிட் A.I ஸ்மார்ட் கடிகாரம்


ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கைப்பேசிகளை உருவாக்குவது போன்று தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியும் சூடு பிடித்துள்ளது.

இதன் அடிப்படையில் அப்பிள், சம்சுங், சோனி என்பவற்றினை தொடர்ந்து தற்போது அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய A.I ஸ்மார்ட் கடிகாரங்கள் அறிமுகமாகவுள்ளன.

1.2GHz Processor, உட்பட 3G வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலையானது 279 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நவற்கிரி காலநிலை